பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 வாருங்கள் பார்க்கலாம் கிறது. பல அடியார்களின் திருவுருவங்களும் மன்னர் களின் சிலைகளும் தூண்களில் உள்ளன. ஒவ்வொன் றுக்கும் கீழே பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. யார் இந்தத் திருக்கோயிலுக்குள்ளே சென்ருலும் மாணிக்க வாசகர் சந்நிதி வழியாகத்தான் செல்ல வேண்டும். இனி மாணிக்கவாசகரிடம் விடை பெற்றுக் கொண்டு முதற் பிராகாரமான வெளிப் பிராகாரத்துக் குள் நுழைந்து பார்க்கலாம். அங்கே கிழக்கு நோக்கித் தென்மேற்கு மூலையில் வெயிலுவந்த விநாயகர் வீற்றிருக்கிறர். திருக்கோயில் இல்லாமல் எப்பொழுதும் வெயில் தம்மேல்பட எழுந்தருளியிருப் பதால் அவரை வெயிலுவந்த விநாயகர் என்று சொல் கிருர்கள். மகாவித்துவான் ரீ மீனுட்சிசுந்தரம் பிள்ளைய வர்கள் புட்டீசுவரம் என்ற இடத்தில் தங்கியிருந்தார். மகாமகோபாத்தியாய ஐயரவர்கள் அவரிடம்மாளுக் கராக இருந்த காலம் அது. அக்காலத்தில் ஆவுடை யார்கோயில் தேவஸ்தானத்தைத் திருவாவடுதுறை ஆதீனத்தின் பிரதிநிதியாக இருந்து நிர்வகித்துவந்த ரீ சுப்பிரமணியத் தம்பிரான் என்பவருக்கு, அத்தல சம்பந்தமாக ஒரு புதிய புராணம் வேண்டும் என்ற ஆசை எழுந்தது. பழைய புராணங்கள் இருந்தாலும் நாட்டுச் சருக்கம், நகரச் சருக்கம் என்பவற்ருேடு புதியதாக ஒன்று வேண்டும் என்பது அவர் கருத்து. நினைத்தால் காவேரி வெள்ளம் போல் புராணங்களைப் பாட வல்லமையை உடைய ரீ மீனுட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் தி ரு வா வடு துறை யாதீன வித்துவானக இருக்கும்போது அவருடைய விருப்பம்