பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 வாருங்கள் பார்க்கலாம் வெளிப் பிராகாரத்தின் மேற்புறத்தில் அக்கினி, தீர்த்தம் என்ற திருக்குளம் இருக்கிறது. அதனை அடுத்து, பிராகாரத்துக்கு மேலே விதானம் அமைந்த தியாகராஜ மண்டபம் என்னும் இடம் இருக்கிறது. திருவிழாவில் இரண்டாம் திருநாளின் காலே முதல், நாலாம் திருநாள் வரை மாணிக்கவாசகர் இங்கே எழுந்தருளுவது வழக்கமாம். மணிவாசகப் பெருமானுக்காக இ ைற வ ன் நரியைப் பரியாக்கினர்; தாமே குதிரை ராவுத்தராக எழுந்தருளினுர். இந்தத் திருக்கோயிலில் குதிரை வீரர்களுக்குச் சிறப்பு அதிகம். ஏழு குதிரை வீரர்களை இங்கே பார்க்கலாம். பெரிய மண்டபத்தில் நாலு பேரும் இப்போது நாம் பார்க்கும் தியாகராஜ மண்ட பத்தில் இருவரும் இருக்கிருர்கள். மற்ருெரு மூர்த்தியை அடுத்த பிராகாரத்தில் உள்ள பஞ்சாட்சர மண்டபத்தில் பார்க்கப் போகிருேம். குதிரையின்மீது எழுந்தருளிய அந்தப் பெருமானேக் குதிரைச் சுவாமி என்றும் அந்த மண்டபத்தைக் குதிரைச்சுவாமி மண் டபம் என்றும் சொல்கிருர்கள். தியாகராஜ மண்டபத்தில் மனத்தை உருக்கும் காட்சி ஒன்று உண்டு. ஒரு துரினில் மாணிக்க வாசகருடைய இரண்டு வகைத் திருக்கோலங்களைக் காணலாம். மந்திரித் திருக்கோலத்தில் அமைந்த திருவுருவம் சற்று மறைவாக இருக்கிறது. இரண்டு தூண்களின் இடுக்கு வழியாகப் பார்க்க வேண்டும். பதவியை மறந்து, செருக்கை ஒழித்து, எம்பெரு மானுடைய திருவருளுக்காக ஏங்கி நின்று புலம்பிய