பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பெருந்துறை 291 மாணிக்கவாசகரையே விளக்கமாகக் காண முடி கிறது. தலையில் முடியும் காதில் குண்டலங்களும் திருமார்பில் ஆரமும் தோள், கை முதலிய இடங் களில் அழகிய அணிகலன்களும் கொண்டு பெரிய அரசரைப்போலத் திருவாதவூரர் ஒரு பக்கம் காட்சி அளிக்கிருர். அந்தக் கோலத்தை நீத்து, உருத்தி ராட்ச மாலை அணிந்த மொட்டைத் தலையும் எளிய திருக்கோலமும் பெற்றுக் கையைக் குவித்தபடியே மாணிக்கவாசகர் தூணின் மற்ருெரு பக்கத்தில் நிற் கிருர், மந்திரிக் கோலம் பெரிய திருஉருவம். ஞானத் திருக்கோலம் சிறியது. மந்திரிக்கு முடி முதலியன இருப்பதில்லை; ஆயினும் சிற்பி மாணிக்கவாசகர் செய்த தியாகத்தை நன்கு நினைப்பூட்டுவதற்கு முடி முதலியவற்றை அமைத்துத்காட்டியிருக்கிருன். மிடுக் குடன் நிற்கும் அந்தத் திருக்கோலத்தைக் கண்டு, அவ்வளவு பெரிய பதவியைப் பொய்யென நீத்து விட்டு வந்தார் மணிவாசகர் என்பதை நினைக்கும் போது மனம் உருகுகிறது. அந்த உருக்கத்தை மிகு திப்படுத்த, துறந்த திருக்கோலத்தையும் அருகில்ே வைத்துக் காட்டியிருக்கிருன் சிற்பி, உருவத்தால் சிறியவராகத் தோற்றிலுைம் ஞானப்பிரானுகிய மணி வாசகருக்கு உள்ள பெருமை வேறு எந்த மன்னருக் குத்தான் வரும்? சிவபெருமானே இந்தத் திருக்கோயி லில் தன்னேயும் அம்பிகையையும் மறைத்துக் கொண்டு தன்னுடைய சீர் பாடிய ஞானச் செல்வ ராகிய மாணிக்கவாசகருக்கு நித்திய நைமித்திக பூசைகளும் பிற சிறப்புக்களும் நிகழும்படி செய்திருக் கிருன்.