பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 வாருங்கள் பார்க்கலாம் மண்டபத்துக்கு மேலே உள்ள கொடுங்கைகளே மர த் தி ைல் அமைத்திருந்தால்கூட இவ்வளவு அழகாகவும் உறுதியாகவும் அமைவது சந்தேகம். அவற்றைப் பார்க்கும் போதுதான், செய்வதற்கு அரியவற்றுள் இந்த ஊர்க் கொடுங்கைகளையும் ஒன்ருக வைத்துச் சிற்பிகள் சொல்வது எவ்வளவு நியாயம் என்பது புலப்படும். இந்தப் பிராகாரத்தின் வடமேற்கு மூலேயில் தல விருட்சமாகிய குருந்த மரம் நிற்கிறது. மாணிக்க வாசகரை ஆட்கொள்ள வந்த எம்பெருமான் குருந்த மரத்தின் அடியில் எழுந்தருளியிருந்தான் என்றும், அப்பெருமானக் கண்ட மணிவாசகர் அங்கே சென்று பணிந்து உபதேசம் பெற்ருர் என்றும் வரலாறு கூறுகிறது. மாணிக்கவாசகரே திருவாசகத்தில், திேயே செல்வத் திருப்பெருங் துறையில் நிறைமலர்க் குருந்தமே வியகீர் ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே என்று இச்செய்தியைக் குறிப்பிட்டிருக்கிருர். திருப்பெருந்துறைத் திருக்கோயிலில் ஆறு சபை கள் உண்டு. கனக சபை, நடன சபை, தேவ சபை, சத் சபை, சித் சபை, ஆனந்த சபை என்ற பெயரு யைவை அவை. ஆலய வரலாறு முதலியவற்றை விளக்கிய நீ ஆத்மநாத நம்பியார் பெருமிதத்தோடு ஒரு செய்தியைச் சொன்னர், சிதம்பரத்தில்கூட, பஞ்ச சபைகளே உண்டு. ஆளுல் இங்கே ஆறு சபைகள் இருக்கின்றன. ஒவ்வொரு சபையிலும் ஒரு