பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பெருந்துறை 293 விசேஷம் உண்டு. ஒவ்வொரு சபைக்கும் ஒவ்வொரு மண்டபம் உண்டு' என்ருர். அவரவர்களுக்கு அவரவர் ஊர் பெரியதுதானே ? இரண்டாவது பிராகாரத்திலிருந்து குதிரைச் சுவாமி மண்டபத்துக்குள் புகுந்தேன், அதற்குப் பஞ் சாட்சர மண்டபம் என்று பெயர். ஆறு சபைக்குள் ஒன்ருகிய கனகசபையும் அதுதான். இந்த மண்டபத் தில் ஒரு தூணில் தெற்குப் பார்த்த நிலையில் குதிரைச் சுவாமி, குதிரையின் மேல் வீற்றிருக்கிருர். குதிரைக் காரருக்கு உரிய உடையும் அணியும் விளங்க, நாலுகால் பாய்ச்சலில் செல்லும் குதிரையின்மேல் அவர் எழுந்தருளியிருக்கிருர். இந்தச் சுவாமிக்கு மாத்திரம் சைவர்கள் பூஜை செய்கிருர்கள். குதிரைகளுக்குப் பெயர் போனது அராபியா தேசம். அங்கிருந்துதான் சிறந்த குதிரைகள் பழங் காலத்தில் வந்து கொண்டிருந்தன. அராபியாவில் வாழ்கிறவர்கள் முஸ்லிம்கள். குதிரைகளே ஒட்டி வந்தவர்களும் முஸ்லிம்களே. யானையை ஒட்டு பவனுக்கு மாவுத்தன் என்றும் குதிரையை ஒட்டுபவ னுக்கு ராவுத்தன் என்றும் பெயர் வழங்குவார்கள். 'குதிரைக்கு மேற்கே பயணம், ராவுத்தனுக்குக் கிழக்கே பயணம் என்ற பழமொழியையும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாமே ! முதல் முதலில் முஸ்லிம் களைக் குதிரை வீரர்களாகக் கண்டனர் தமிழர். அவர்களை ராவுத்தர் என்று அழைத்தார்கள், பிற் காலத்தில் எல்லா முஸ்லிம்களும் தமிழ் நாட்டாருக்கு ராவுத்தர்களாகி விட்டார்கள். ராவுத்தர் என்பார் தென்னுட்டில் வாழும் முஸ்லிம்களில் ஒருபிரிவினரே.