பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 வாருங்கள் பார்க்கலாம் ஆளுலும் இது மற்றவர்களுக்குத் தெரியாது. அருண கிரிநாதப் பெருமானும் மயில் வாகனத்தைக் குதிரை யைப் போல வேகமாக ஒட்டுவதால் முருகனே ராவுத்தன் என்று பாடுகிறர். படிக்குங் திருப்புகழ் போற்றுவன் கூற்றுவன் பாசத்தில்ை பிடிக்கும் பொழுதுவந் தஞ்சலென் பாய்பெரும் பாம்பினின்று நடிக்கும் பிரான்மரு காகொடுஞ் சூரன் நடுங்கவெற்பை - இடிக்குங் கலாபத் தனிமயில் ஏறும் இராவுத்தனே. ஆவுடையார் கோயிலில் உள்ள குதிரைச் சுவாமி மண்டபத்தைக் குதிரை ராவுத்தர் மண்டபம் என்றும் வழங்குவதுண்டாம். இங்கே ஒரு ராவுத்தச் சுவாமி இருக்கிருர் அல்லவா ? இந்தக் கோயிலில் ராவுத்தச் சுவாமிக்கு அருகில்வந்து இன்றும் முஸ்லிம் கள் தொழுகிருர்கள். இதற்குமேல் அவர்கள் கோயி லுக்குள் போவதில்லை. நான் போயிருந்த போது தினந்தோறும் தொழுகை நடத்தும் முஸ்லிம் ஒரு வரைக் கண்டேன். - குதிரைச் சுவாமி மண்டபத்தின் மேல் பாவு கல்லில் பல கதைச் சிற்பங்கள் இருக்கின்றன. சைவ சித்தாத்த சாஸ்திரங்களில் சொல்லப்படும் ஆறு அத்துவாக்களேயும் மற்றவுற்றையும் அவற்றுக்குரிய எழுத்துக்களோடு காட்டும் சிற்பங்கள் பாவுகல்லில் அமைந்திருக்கின்றன. பாவுகல்லே அடுத்த சுவர்ப்