பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்பக் கருவூலம் 299 குத்திருநீறு அளித்துவிட்டு மறைந்தார். அது முதல் ஆத்மநாதருக்கு முந்நூற்ருெருவர் என்ற திருநாமம் வழங்கி வருகிறது. முந்நூற்றுவர் என்று வழங்கும் மறையவர்கள் இறைவனுக்குப் பூசை செய்து வாழ்ந்து வந்தார்கள் பாண்டிய மன்னன் அவர்களுக்கு விடும் நிலமும் வழங்கினன். அவர்கள் மனைவி மக்களுடன் இனி தாக வாழும்போது அவர்களுக்கு ஒரு குறை உண்டா யிற்று. அவர்களுடைய பிள்ளைகளுக்கு மறை பயிற். றும் ஆசாரியர் யாரும் கிடைக்கவில்லை. அவர்கள் யாவரும் ஆத்மநாதருடைய ஆராதனையில் ஈடுபட்ட வர்களாதலின் அவர்களுக்கு ஓய்வு இல்லை. அப்போது ஆத்மநாதரே முதிய வேதியராக உருவெடுத்து வந்தார். சிவ சின்னங்களுடன் வாய் எப்போதும், சிவசிவ என்று சொல்லிக்கொண்டே இருக்கக் கையில் ஒரு கோலே ஊன்றிக்கொண்டு வந்த அவரை, முந்நூற்றுவர் கண்டார்கள். அவர்ை வரவேற்று உபசரித்தார்கள். பின்பு, தாங்கள் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். எனக்கு என்று தனியாகச் சொல்ல ஊர் ஏதும் இல்லை. நான் எங்கும் இருப்பேன். அநாதராக இருப்பவர்களுக்கு ஊர் ஏது?" என்ருர் முதியவர். "நீர் என்ன தொழில் செய்ய வல்லீர்?" "நான் வேதியச் சிறுவர்களுக்கு மறை பயிற்று வேன்’ என்ருர் ஆவர்.