பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 வாருங்கள் பார்க்கலாம் எங்கே ஒர் ரிக்குச் சொல்லுங்கள், பார்ப்போம்: என்று மறையவர்கள் கேட்டார்கள். அவர் கணிர் என்று மழை பொழிவதுபோலப் பொழிந்தார். அது கேட்டு யாவரும் மகிழ்த்து, “சுவாமி, எங் கள் குழந்தைகள் அத்தியயனம் செய்ய வேண்டும். அதற்குத் தக்க ஆசிரியர் கிடைக்கவில்லேயே என்று நாங்கள் கவலைப் பட்டுக் கொண்டிருந்தோம். ஆத்ம நாதரே உங்களே இங்கே அனுப்பியிருக்கிருர். நீங் கள் இந்த ஊரிலேயே தங்கி, இந்த உபகாரத்தைச் செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்கள். அவர் ஒப்புக்கொள்ளவே,"நாங்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் ?” என்று மறையவர்கள் கேட்டார்கள். “எனக்கு அன்பு ஒன்றுதான் வேண்டும். பசித்த பேரது அன்னமிட்டால் போதும்.' இது கேட்டு வியந்த முந்நூற்றுவரும் அவரை வணங்கி, ஒவ்வொரு நாள் ஒவ்வொருத்தர் வீட்டில் உணவளிப்பதாகத் திட்டம் செய்தார்கள். முதிய மறையவராகிய ஆத்மநாதர் அது முதல் பிராமணக் குழந்தைகளுக்கு முறையாக வேதம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினர். வேத பாடசாலையில் விநாயகரைப் பிரதிஷ்டை .ெ ச ய் து வழிபட்டு, மறையவர் சிறுவர்களுக்கு வேத பாடசாலை நடத்தி வந்தார், மறைப்பொருளாயுள்ள பெருமான். அப்போது திருப்பெருந்துறைக்கு அருகில் உள்ள ஒருரில் குறும்பர்களின் தலேவகை ஒருவன்