பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்பக் கருவூலம் 30f இருந்தான். அவனேக் குறும்ப வேளான் என்றும் லுண்டாட்சன் என்றும் சொல்வார்கள். லுண்டாட். சன் என்பதற்குச் சுழல் கண்ணன் என்று பொருள். அவன் பல குறும்பர்களுக்குத் தலைவனுக இருந்தமை யால் போர் வந்தால் தன் இனத்தோடு சென்று, பாண்டியனுக்கு உதவி செய்வான். இதனுல் பாண்டி யனுடைய அன்பு அவனுக்குக் கிடைத்தது. அரசனுடைய நட்பும் அரசியல் செல்வாக்கும் கிடைத்துவிட்டால் மனிதன் மாறுவதற்குக் கேட்க வேண்டுமா ? தான் ஒரு சிற்றரசனேப் போல வாழ வேண்டும் என்ற ஆசை அவனுக்கு உதித்தது. பாண்டியனுடைய ந ட் பு இரு க் கிற .ெ த ன் ற துணிவினுல் மெல்ல மெல்லத் தன் ஊரிலுள்ள நிலங் களையும் அருகிலுள்ள ஊர் நிலங்களையும் தன்னுடை யன ஆக்கிக் கொண்டான். திருப்பெருந்துறையில் உ ள் ள முந்நூற்றுவராகிய மறையவர்களுக்குப் பாண்டியன் வழங்கியிருந்த இறையிலி நிலங்களையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கவர்ந்து கொண்டான். அதோடு மன்னன் அவர்களுக்குத் தந்திருத்த ஆவண ஒலேயையும் எப்படியோ ஏமாற்றி வாங்கிக் கொண்டான். - நிலம் முழு வ தும் அக்கொடியோனிடம் செல்லவே திருப்பெருந்துறை மறையவர்கள் மிகவும் வருந்தினர்கள். வறுமை அவர்களைப் பற்றிக் கொண்டது. ஆயினும் ஆத்மநாதருடைய வழி பாட்டை முட்டின்றிச் செய்து வந்தார்கள். -