பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 வாருங்கள் பார்க்கலாம் அவர்களுக்கு நிலம் வழங்கின பாண்டியன் அப் போது இல்லே. அப்போது ஆட்சி செலுத்தியவன் இளம் பருவம் உள்ளவன். அரசனே இளையவளுக் இருக்கிருன். நம்முடைய நிலங்களைக் கவர்ந்தவன் அவனுக்கு வேண்டியவன். நிலங்கள் நமக்கு உரியன என்பதைக் காட்ட நம்மிடம் ஆவண ஒல இல்லே. அவற்றையும் அவன் கைப்பற்றிக் கொண்டான். இப்போது நிலங்களே அவனே ஆண்டு வருகிறன். அவை நம்மைச் சேர்ந்தன என்று நாமே சொல்வதை யன்றி நமக்காக வேறு யார் சாட்சி சொல்வார்கள்? அந்தக் குறும்ப வேளானுக்கு அஞ்சி யாரும் வரமாட் டார்களே. ஆட்சி, ஆவணம், சாட்சி என்ற மூன்றும் இல்லாமல் நிலம் நம்முடையது என்று எப்படி உரிமை கொண்டாடுகிறது?’ என்று எண்ணி எண்ணி ஏங்கினர்கள். எப்படியாவது மதுரை சென்று பாண்டியனிடம் முறையிட்டுக் கொள்வோம்’ என்று தீர்மானித்தார்கள். அதை உணர்ந்த மறை யாசிரியராக இருந்த ஆத்மநாதர், "நானும் உங்களுடன் வருகிறேன்’ என்ருர், "அப்படியால்ை எங்கள் காரியம் சித்தியாகும்” என்று மறையவர்கள் மகிழ்ச்சிகொண்டு அவரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார்கள். யாவரும் மதுரை வந்து சேர்ந்து, அரண்மனை சென்று, தம்முடைய வரவை அரசனுக்குச் சொல்லி யனுப்பினர்கள். அவன் வரும்படி ஏவ, யாவரும் பாண்டியன் அவையிற் புக்கு அவன் இருக்கை நல்க அமர்ந்து, தம் வழக்கை உரைத்தார்கள்.