பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 வாருங்கள் பார்க்கலாம் யவை என்று சொல்கிறீர்களே! இது வெல்லும் வழக் காகுமா?’ என்று கேட்டான் பாண்டியன். உண்மை ஒன்றே எங்கள் பங்கில் இருக்கிறது. நாங்கள் வழிபட்டு வரும் ஆத்மநாதர் அறிய இந்த நிலங்கள் எங்களுடையவையே' என்று மறையவர் வற்புறுத்திச் சொன்னர்கள். பாண்டியன் ஒன்றும் தெரியாமல் சற்றே கலங்கி ன்ை. பின்பு குறும்ப வேளானே அழைத்துவரச் செய்து, மறையவர் வழக்கை எடுத்துரைத்து, "நீ நிலங்களைக் கவர்ந்ததுண்டோ?’ என்று கேட்டான். "இவர்கள் சொல்லும் வழக்கு உண்மையானுல் முயலுக்குக் கொம்பு இரண்டு என்று சொல்லுவதும் உண்மையாக வேண்டும்' என்று குறும்ப வேளான் விடையிறுத்தான். பாண்டியன் யோசனையில் ஆழ்ந்தான். பிறகு, "நிலங்கள் உன்னுடையவை என்பதற்கு ஆதாரம் என்ன?’ என்று வினவிஞன். "தொன்றுதொட்டு நானே ஆண்டு வருகிறேன். இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா? "அப்படியானுல் அந்த நிலத்திற்கு ஏதேனும் அடையாளம் உண்டா?’’ அந்த நிலமெல்லாம் மேட்டு நிலம். இரண்டு பனை ஆழம் வெட்டினுலும் தண்ணிர் ஊருது” என் ருன் குறும்ப வேளான்.