பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்பக கருவூலம் 305 அப்போது பாண்டியன் மறையவர்களைப் பார்த்து, "நீங்கள் ஏதேனும் அடையாளம் சொல்ல முடியுமா?’ என்று கேட்டான். அவர்கள் ஒன்றும் சொல்ல இயலாமல் கலங்கினர்கள். அப்போது வேத ஆசிரியராக இருந்த கிழவர் முன்னே வந்து, "எங்கள் நிலத்தில் மண்வெட்டியால் வெட்டினுல் அந்த வெட்டு வாயில் நீர்க்குமிழி தோன்றும்’ என்று தைரியமாகச் சொன்னுர். $ அதைக் கேட்ட குறும்ப வேளான் உள்ளத் துள்ளே உவகை பூத்தான். இந்தப் பைத்தியம் ஏதோ உளறுகிறது. பாதாளம் போனலும் தண்ணீர் காணுத நிலத்தில் வெட்டுவாயில் நீர் காண்பதாவது! நம் கட்சி வெல்வதற்கு இந்தக் கிழவர் பேச்சே போதும் என்று மகிழ்ந்தான். மறையவர்களோ, "ஐயையோ, இந்தக் கிழட்டு மனிதர் திடீரென்று இப்படிச் சொல்கிருரே! இவர் சொல்வது நடக்கிற காரியமா? இவரை ஏன் அழைத்து வந்தோம்!” என்று அங்கலாய்த்தார்கள். அரசனுக்கும் சிறிது ஐயம் உண்டாயிற்று. - :நீர் சொல்வது உண்மைதான?’ என்று அவன் கேட்க அவர், "உண்மை, உண்மை; முக்காலும் உண்மை’ என்ருர். . . 'நீ என்ன அப்பாசொல்கிருய்?' என்று குறும்ப வேளான அரசன் கேட்க, 'அப்படி இருந்ததானுல் நிலம் அவர்களுடையதே; அதைச் சோதித்துப் பார்க்கலாம்' என்ருன்.