பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 வாருங்கள் பார்க்கலாம் அரசன் உடனே மறையவர்களேயும் லுண்டாட் சஆனயும் முன்னலே போகச் சொல்லிவிட்டுப் பின்னல் குதிரைமீதேறிப் புறப்பட்டான். யாவரும் திருப் பெருந்துறையை அடைந்தார்கள். வழக்குக்குரிய நிலப்பரப்புக்குச் சென்ற பாண்டியன் மண்வெட்டி களே வருவித்து, வெட்டிப் பாருங்கள்’ என்ருன். அப்போது:கிழவேதியர், லுண்டாட்சனே வெட்டட் டும்' என்று கூறினர். குறும்ப வேளான் மேடாகப் பார்த்து அங்கே வெட்டினன். அங்கே பளிரென்று ஊற்று எழுந்து, அவன் முகத்தில் அடித்தது. பின்னும் ஒரிடத்தில் வெட்டினன். அங்கும் அப்படியே நீர் தோன்றியது. இப்படிப் பல இடங்களில் வெட்ட வெட்ட நீர் வேக மாகத் தோன்றியது. பல இடங்களில் நீர் தோன்றி யம்ையின் எங்கும் நீர்த் துறையாயிற்று, அதனல் திருப்பெருந்துறை என்ற பெயர் இத்தலத்துக்கு அமைந்தது. குறும்ப வேளான் செய்த தவறு, இப்போது வெளிப்பட்டு விட்டது. பாண்டியன் உண்மையை உணர்ந்தான். அதுகாறும் அங்கு நின்றிருந்த முதிய வேதியர் மறைந்தருளினர். அப்போது யாவரும் ஆத்மநாதரே தமக்குத் துணையாக வந்து அருள் செய்தார் என்று உணர்ந்து, அப்பெருமான எண் னித் துதித்து உருகிஞர்கள். பாண்டியன் லுண்டாட் சனுக்குச் சிறைத் தண்டனை விதித்தான். . மேலே கண்ட வரலாறு புராணத்தில் உள்ளது. இன்று ஆலயத்தில் பூசை செய்பவர்கள் அந்த