பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்பக் கருவூலம் 307 முந்நூற்றுவர் பரம்பரையைச் சேர்ந்தவர்களே. முத் நூறு குடும்பங்கள் இப்போது இல்லை. முப்பது குடும் பங்களே இருக்கின்றன. அந்த மறையவர்கள் ஆக் னிவேக்ய சூத்திரம் என்ற சூத்திரத்தை உடையவர் கள். அது மிகவும் அரிய சூத்திரம். ஆவுடையார் கோயிலேச் சார்ந்து, வடக்கூர் என்ற ஊர் இருக்கிறது. அங்கேதான் முந்நூற்றுவர். வீடுகளும் ஆதியில் இருந்தனவாம். இப்போதும் சிலர் அங்கே இருக்கிருர்கள். அங்கே நாராயண தீர்த்தம் என்ற குளமும் அதன் கரையில் பள்ளிக் கூடப் பிள்ளையார் கோயிலும் இருக்கின்றன. முந்நூற்றுவருக்குள்ளே மேலே சொன்ன வரலாறு சிறிது மாறுபாட்டுடன் வழங்குகிறது. அதை பூநீ ஆத்மநாத நம்பியார் ச்ொன்னுர். - "உன் நிலத்துக்கு அடையாளம் என்ன?’ என்று பாண்டியன் குறும்ப வேளானைக் கேட்டபோது, “என் பூமி வெள்ளாற்றுக்கும் பல துளியாற்றுக்கும் நடுவில் உள்ளது ; எங்கே வெட்டினுலும் அறுபது முழத்துக்குக் கீழே நீர் இருக்கும்' என்ருன். கிழ வேதியர், "எங்கள் பூமியில் ஆறு முழத்துக்குக் கீழ் நீர் காணும்' என்ருர் குறும்ப வேளான் ஒரு மேட்டில் வெட்டியபோது ஆறு முழத்திலேயே நீர் ஊற்று வந்து விட்டது. அரசன் உண்மை தெரிந்து, நிலங்களே மறையவர்களுக்கு வாங்கி அளித்தான். குறும்பு வேளான் வெட்டி, ஊற்று வந்த இடம், இன்றும் கீழ்நீர்க்காட்டி என்று வழங்குகிறதாம். முதிய மறையவர் மற்றவர்களிடம் முன்பே ஒரு நிபந்தனை பேசிக்கொண்டாராம். உங்கள் வழக்கை