பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 வாருங்கள் பார்க்கலாம். பார்க்க வேண்டாமா? இந்தக் கோயிலே ஒரு சிற்பக் கருவூலம் என்றே சொல்லலாம். எ ங் கே பார்த் தாலும் சிற்ப உருவங்கள். இதோ ஒரு வேடனு டைய உருவத்தைப் பாருங்கள். உறுக்கிய மீசையும் முறுக்கிய உடம்புமாக நிற்கிருன். அவன் தன் கேசத் தைப் பின்னிக் கொண்டிருக்கிருன். சீனுக்காரன் என்று நினைத்து விடாதீர்கள். இது அந்தச் சாதியின் பழைய வழக்கம்போல இருக்கிறது. மற்ருெரு தூணில் குறத்தி நிற்கிருள். ஆ என்ன வடிவம்! அவள் கையில் வைத்திருக்கும் கூடையைக் கல் என்று யாராவது சொல்ல முடியுமா? கூடை முறம் கட்டும் குறத்தியும் அந்தக் குறவனும் இங்கே எங்கே வந்தார்கள்? சோமாசிமாற நாயனுர் யாகத்துக்கு வந்த வேடம் இது' என்று சொன்னர்கள். அர்ச்சுனன் தவத்தைக் கலைக்க வந்த வேடன் என்றுதான் சொல்லுங்களேன். எ ப் ப டி யோ, இறைவன் வேட வேடமும் கொள்ளும் கருணை யுடையவன் என்று .ெ த ரி ந் து .ெ கா னன் டா ல் போதும். இன்றைக்கெல்லாம் இந்த அற்புத வடி வங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். மண்டபத்தினுள்ளே ஒரு தூணில் வடக்குப் பார்த்துக் கை குவித்த கோலத்தோடு மணிவாசகர் நிற்கிருர். இரண்டு பக்கத்திலுள்ள தூண்களிலும் பதஞ்சலியும் வியாக்கிரபாதரும் காட்சி தருகிருர்கள் அவர்கள் இங்கே வந்து தவம் செய்ய, தில்லேயில் நடனக் காட்சி தருவதாக இறைவன் அருளினுனும் அதல்ை இதற்கு நடன மண்டபம் என்ற பெயர் வந்த தாம். - - -