பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 வாருங்கள் பார்க்கலாம் அவரைப் பார்த்தே தெரிந்துகொள்ளலாம். அவர் கையில் மான் இல்லை ; மழு இல்லை. தாருகா வனத்து முனிவர் அனுப்ப இறைவன் அவற்றைப் பற்றித் தன் கையில் வைத்துக் கொண்டான். உமாபாகர் இங்கே எழுந்தருளியது அந்த நிகழ்ச்சிக்கு முற்பட்ட காலம். உமாபாகர் மான் மழுவின்றிப் பழை யவராகக் கோ ல ம் .ெ கா ண் டி ரு ப் ப ைத ஞானசம்பந்தரும் சொல்கிருர். செறிமுள ரித்தவி சேறி ஆறும் செற்றதில் வீற்றிருந் தானும் மற்றைப் பொறியர வத்தன யானும் கானப் புகலி கிலாவிய புண்ணியனே எறிமழு வோடிள மான்கை இன்றி இருந்த பிரான்!” - என்பது அவர் பாட்டு பழமையைக் குறிக்க எத்தனே அழகான அமைப்பு! வடக்குப் பிராகாரத்தில் உள்ள படிக்கட்டின் வழியே ஏறி, மலேயில் உள்ள பறவைகளையும் கண்டு, உமாபாகர் திருமுன் நின்றேன். அந்தக் கம்பீரமான கோலம் முன்னே நிற்பவர்களுடைய சிறுமையை நன்கு எடுத்துக் காட்டுகிறது. சாந்தமே வடிவமாகக் கருணை பொலியும் திருமுகத்தோடு வீற்றிருக்கிருர் அவர். அந்தப் பெருமானுடைய தரிசனத்தால் மனம் சாந்தி பெறுகிறது. х

  • முளரித் தவிக-தாமரையாகிய ஆசனம், ஆறும் செற்றுகாமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற

ஆறு உட்பகைகளையும் அழித்து. வீற்றிருந்தான்-பிரமன். அரவத்தனே யான்-திருமால். . . . * - -- - - ... . . . .