பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோணிபுரம் 21 தலத்தைப் பற்றிய வரலாறுகள் வழங்கி வந்தன. தேவார காலத்தில் எத்தனையோ வரலாறுகள் வழங்கின என்பதைத் தேவாரப் பதிகங்களைக் கொண்டு அறியலாம். இத்தலத்துக்கு 71 தேவாரப் பதிகங்கள் இருக் கின்றன. அவற்றில் திருஞான சம்பந்தர் பாடியவை 67. சீகாழிக்கும் திருவீழி மிழலைக்கும் அதிகப்படி யான பதிகங்களே ஞானசம்பந்தர் பாடினர். அதனல், “காழிபாதி, வீழி பாதி’ என்று ஒரு பழமொழிகட்ட உண்டாகிவிட்டது. திருஞானசம்பந்தர் இத் தலத்தைப் பற்றிய வரலாறுகள் பலவற்றைக் குறிப் பிடுகிருர். ஊர்பரந்தஉல கின்முத லாகிய ஓர் ஊர் இதுவென்னப் பேர்பரந்தபிர மாபுரம் என்றும், கருமை பெற்றகடல் கொள்ள மிதந்ததோர் காலம் இதுவென்னப் பெருமை பெற்ற பிர மாபுரம் மேவிய பெம்மான் என்றும் முன்னே சொன்ன செய்திகளை அவர் வாக்கிலும் காணலாம். - திருமலையின்மேல் எழுந்தருளியிருக்கும் உமாபாக ருடைய திருவுருவம் மிகப் பெரியது. அங்கே போனல் உருவத்தின் அழகிலே ஈடுபடாமல் இருக்க முடியாது. இந்தத் தலம் மிகப் பழையது என்பதை உமாபாகரைத் தரிசித்தாலே தெரியும். அவர் தாருகாவனத்து முனிவருடைய யாகத்தை அழிப் பதற்கு முன்பே உண்டான ஊர் இது என்று