பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்பக் கருவூலம் 315 அருவமாக யோக பீடத்தில் எழுந்தருளியிருக்கிருள். சந்நிதியில் மேலே வளைகளைக் கட்டியிருக்கிருர்கள். குழந்தை வேண்டுமென்று பிரார்த்தித்துக் கொண்ட வர்கள் செலுத்திய பிரார்த்தனே அவை. - சிவயோக நாயகி சந்நிதியை அடுத்து ஆத்ம நாதர் கர்ப்பக்கிருகத்துக்கு நேர் பின்னலே ஒரு மண்டபமும் அதில் குருந்த ம ர த் தி ன் உருவச் சிலேயும் உள்ளன. அதைக் குருந்தமூல சுவாமி என்று சொல்கிருர்கள். வெளிப்பிராகாரத்திலே தல விருட்சமாகிய குருந்த மரமே இருக்கிறது. பழங் காலத்தில் மாணிக்கவாசகருக்கு அருள் செய்ய ஆத்மநாதர் எழுந்தருளிய குருந்த மரம் இந்த இடத்தில் இருந்ததாம். - இந்தப் பி ரா கா ர த் தி ன் வழியே சென்ருல் புடைப்புச் சிலே வடிவில் இருக்கும் நடராஜருடைய சந்நிதியை அடைவோம். வட கிழக்கு மூலையில் அந்தச் சந்நிதி. நடராஜாவையும் வீரபத்திரரையும் தவிர வேறு பரிவார மூல மூர்த்திகள் இங்கே இல்லை. கோபுரத்தில் ஓரிடத்தில் முருகன் உருவம் இருக் கிறது. அவரைப் பெருந்துறைக் குமாரர் என்று புராணம் சொல்லுகிறது. . தேவசபைக்கு அடுத்தது சத் சபை, அதை அமுது மண்டபம் என்று சொல்வார்கள். அமுது படைக்கும் இடம் இது. இந்த மண்டபத்தில் ஒரு பெரிய படைகல் இருக்கிறது; அட்சயசிலே என்று சொல்வார்கள். ஆ த் ம ந த ரு க் கு ச் செய்யும் நைவேத்திய அன்னத்தை இதில் அப்படியே கொட்டி விடுகிருர்கள். ஆவியோடு அன்னம் நிவே திக்கப் பெறுகிறது.