பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகத்தின் பொருள் தமிழ் நாட்டில் பெரும்பாலும் எல்லா ஊர்களிலும் கோயில்கள் உண்டு. 'ஊரான் ஓர் தேவகுலம்’ என்று உரையாசிரியர்கள் ஒரு பழைய தொடரை உதாரணமாகக் காட்டுவார்கள். கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று பழைய மொழி ஒன்றும் வழங்குகிறது. ஊருக்கு ஒரு கோயில் என்று பெருமைப்படும் வழக்கம் தமிழரிடம் இருந்தது. சிவன் கோயில், பெருமாள் கோயில் என்று இரண்டு கோயில் களும் இருக்கின்றன. ஊருக்கு ஒரு கோயில் இருப்பது போலவே தமிழ் நாட்டுக்கு ஒரு கோயில் இருக்கிறது. சிவன் கோயில், பெருமாள் கோயில் என்ற இரண்டும் உள்ளன. வைத்தீசுவரன் கோயில் என்ருல் அது புள்ளிருக்கு வேளுரில் உள்ள கோயில். மாயூரநாத சுவாமி கோயில் என்ருல் அது மாயூரத்தில் உள்ள கோயில். அந்த அந்த ஊர்க்காரர்களுக்கு அது அது கோயில். ஆல்ை தமிழ்நாட்டுக்காரர்களுக்கே பொது வான கோயில் ஒன்று இருக்கிறது. எந்த அடையை யும் சொல்லாமல் கோயில் என்ருல் போதும். அதைப் பக்தர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள். சைவர்களுக்குக் கோயில் என்றவுடன் நடராஜா ஆனந்தக் கூத்தாடும் சிதம்பரம் நினேவுக்கு வரும். அதற்குக் கோயில் என்பதே ஒரு பெயர். அப்படியே