பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகத்தின் பொருள் 321 முதலில் திருச்சிற்றம்பலம் என்று சொல்லித் தொடங்கு வதும், பாடி முடிந்தவுடன் திருச்சிற்றம்பலம் என்று சொல்லி முடிப்பதும் வழக்கம். அப்படியே அந்த ஒதுவாகும் திருச்சிற்றம்பலம் என்று சொல்லித் தேவாரம் பாடத் தொடங்கினர். - அதற்குள் கச்சியப்ப முனிவர் அவரை இடை மறித்தார். நான் காஞ்சீபுரம் தேவாரத்தைப் பாடச் சொன்னேன். எடுத்தவுடன் திருச்சிற்றம்பலம் என்று சொல்கிறீரே. திருவேகம்பம் என்று சொன்னுல் முறை யாக இருக்கும். அப்படிச் செய்யாமல் திருச்சிற்றம் பலம் என்று ஏன் சொன்னர்?’ என்று கேட்டார். ஒதுவார் சற்று நிதானித்தார். அது சம்பிரதா யம். திருச்சிற்றம்பலம் எல்லாவற்றுக்கும் பொது' என் ருர். உடனே கச்சியப்ப முனிவர், "திருச்சிற்றம்பலம் பொதுவானுல் அதன் துதியும் பொதுவானதுதானே? காஞ்சீபுரத் தேவாரத்தைச் சொல்வதற்கு முன் திருச் சிற்றம்பலம் என்று சொல்வது முறையென்று தெரிந்த உமக்குக் காஞ்சீபுரப் புராணத்தில் முதலில் அந்தத் திருச்சிற்றம்பலத்தில் நடமிடும் பெருமானத் துதிப்ப தும் முறைதான் என்று விளங்கவில்லையோ? என்ருர். சபையில் ஒரே ஆரவாரம். தடை எழுப்பின ஒதுவார் முகம் வாடினர். பின்பு அவர் அங்கே உட் கார்ந்திருப்பாரா? சிதம்பரம் எல்லாத் தலங்களுக்கும் பொது என் பதற்கு இந்த வரலாறு ஒரு சான்ருக இருக்கிறது அல்லவா? அதனுல்தான் மற்றக் கோயில்களே இன்ன ஊர்க் கோயில் என்று சிறப்பித்துச் சொல்லும் அன்பர்