பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 வாருங்கள் பார்க்கலாம் கள், அடையேயின்றி பொதுவாகக் கோயில் என்ருல், அது சிதம்பரத்தையே சுட்டுகிறது. - சைவ சமய ஆசாரியர்கள் நான்கு பேரும் திருத் தில்லைக்கு வந்து ஆனந்தக் கூத்தரைத் தரிசித்து இன்புற்றிருக்கிருர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வோர் அநுபவத்தைப் பெற்ருர்கள். மாணிக்கவாசகர் பெற் றது பெரும் பேறு. அவர் இறைவனுேடு கலந்த இடமே சிதம்பரந்தான். சிதம்பரம் திருக்கோயிலில் நான்கு பெரிய திரு வாயில்கள் இருக்கின்றன. நாலு திசையிலிருந்தும் அன்பர்கள் வருவார்கள் என்று நான்கு வாயில்களே அமைத்திருக்கிருர்கள். அந்த நாலு வாயில்களின் வழியே நால்வராகிய சமயாசாரியார்கள் வந்தனர் என்று ஒரு செய்தி இங்கே வழங்குகிறது. நடராஜப் பெருமான் தெற்கு நோக்கித் தாண்டவமாடுகிருர். மணிவாசகர் அவருக்கு இடப் பக்கமாகிய கிழக்குக் கோபுர வாயில் வழியே புகுந் தார். மாணிக்க வாசகர் இறைவனே நாயகனுகவும், தம்மை நாயகியாகவும் கொண்டு வழிபடும் சன்மார்க்க நெறியில் நின்றவர். அதல்ை இடப் பக்கமாகிய கீழ்த் திசை வழியே வந்தாராம். குழந்தையாகிய சம்பந்தர் நேர்முகமாகத் தெற்கு வாயில் வழியே வந்தார். தாசமார்க்கத்தில் நின்ற அப்பர் ஊழியரைப்போலப் பணிவுடன் வலப் புறமாகிய மேற்கு வாயில் வழியே வந்தார். நண்பராகிய சுந்தரர் பின்புறமாகிய வடக்கு வாயில் வழியே வந்தார். இந்த நான்கு திருவாயில் களிலும் அவரவர்களுக்குத் தனியே கோயில் இருந்த தாகத் தெரிகிறது.