பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகத்தின் பொருள் 323 2 பாண்டிய மன்னனிடம், ‘இனி எம்பெருமான் பணித்தபடியே நான் தில்லை செல்ல வேண்டும்” என்று கூறி விடைபெற்ற திருவாதவூரர் உலகப் பற்றை முற்றும் ஒழித்துத் தவக்கோலத்தை மேற் கொண்டார். தம்மை ஆட்கொண்ட நாயகராகிய ஆத்மநாதர் எழுந்தருளியிருக்கும் திருப்பெருந்துறை சென்ருர், குருநாதரைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆர்வம் மீதுார்ந்து நின்றது. மனத்தைப் போல விரைந்து சென்ருர். காற்றைப் போலச் சென்ருர். கன்றை நாடும் கபிலேயைப் போலவும், மடை திறந்த வெள்ளம் போலவும் சென்ருர், மிடைகெட வைத்த பாத வித்தகர் ஊரை நோக்கி நடையிடும் எல்லை தன்னில் நன்மன விரைவும் காற்றும் தடைபடு கன்றை நாடும் கபிலையும் ததும்பி கின்று மடையினை உடைக்கும் நீரும் ஆயினர் வாத ஆரர். . (திருவாதவூரர் புராணம்) திருப்பெருந்துறையை அடைந்தபோது அங்கே தம்மை ஆ ட் .ெ க | ண் ட பெருமான் தம்முடைய மாளுக்கர் கூட்டத்தோடு எழுந்தருளியிருப்பதைக் கண்டார். அங்கே சென்று ஞ | னு சிரிய ைர ப் போற்றிப் பணிந்து வழிபட்டுத் தொண்டர் இனத் தோடு இருக்கும்போது, ஆசிரியராக வந்த பெருமான் "நாம் இனிக் கைலேக்கு எழுந்தருள வேண்டும்: