பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 வாருங்கள் பார்க்கலாம் என்று கூறினர். அது கேட்ட அடியார்களெல்லாம், எநாங்கள் எவ்வாறு எம்பெருமான் பிரிவைத் தரித்து வாழ்வோம்' என்று புலம்பினர். குருநாதர், சில காலம் இங்கிருந்து இந்த ஆலயத் திருப்பணி செய்து கொண்டு வாழுங்கள். அப்பால் இந்தப் பொய் கையில் கனற்பிழம்பு ஒருநாள் தோன்றும் அப்போது அதில் நீங்கள் கலந்து நம்பால் எய்தலாம்” என்று அருளிச் செய்து புறப்பட்டார். அவரை அன்பர்கள் தொடர்ந்து சென்ருர்கள். நீங்கள் நில்லுங்கள்' என்று அவர் கட்டளையிடவே நின்ருர்கள். ஆயினும் திருவாதவூரர் மாத்திரம் அவரை விடாமல் பின் சென்ருர். அவர் வருவதைக் கண்ட பெருமான் ஒரு கொன்றை மரத்தின் நிழலில் தங்கினர். மணிவாசகர் அவர் காலில் வீழ்ந்து எழுந்து கண்ணிர் தாரை தாரையாகப் பொழிய நின்றர். குருநாதர் அவரைப் பார்த்து, பொய்கையில் தோன்றும் சோதிப் பிழம் பில் மற்றவர்கள் புகும்போது நீ புகவேண்டாம். உத்தரகோசமங்கை, திருக்கழுக்குன்றம் முதலிய தலங்களுக்குச் சென்று வழிபட்டுப் பின்பு திருத்தில் இலக்குப் போய் அங்கே பெளத்தரை வாதில் வென்று பிறகு நம்மிடம் வந்து சேரலாம்” என்று அருள் செய்து மறைந்தார். குருநாதரைப் பிரிந்த துயரம் பொருமல் அழுது புலம்பினர் மாணிக்கவாசகர். திருப்பெருந்துறையில் சில காலம் தங்கியிருந்து ப்ல'பாடல்களைப் பாடினர். பிறகு உத்தரகோசமங்கைக்கும் வேறு தலங்களுக்கும் சென்று வணங்கினர். பின்பு சோழ நாட்டில் உள்ள திருவிடைமருதூர், திருவாரூர், சீகாழி ஆகிய தலங் க்ளேத் தரிசித்துக் கொண்டு நடுநாட்டுக்கு வந்து பல