பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகத்தின் பொருள் 325 இடங்களைத் தரிசித்துத் திருவண்ணுமலேக்குச் சென்று திருவெம்பாவை, திருவம்மானே இரண்டும் பாடினர். . - அங்கிருந்து தொண்டை நாடு சென்று திருக் கழுக்குன்றத்தில் தம் குருநாதர் கோலம் காட்டத் தரிசித்து இன்புற்ருர், பிறகு தம் குருநாதர் பணித்த படியே தில்லைத் தலத்தை நோக்கிப் புறப்பட்டார். சிதம்பரத்திற்குப் போகும் வழியிலே அவர் போளுர் என்பதைத் திருவாதவூரர் புராணக்காரர் அழகாகச் சொல்கிருர். பெரும்பற்றப் புலியூர் என்பது சிதம்பரத்துக்கு ஒரு பேர். புலியூர் என்று சுருக்கமாகச் சொல்வதும் உண்டு மாணிக்கவாசகர் இறைவனே நாடிச் செல் கிருர். அவர் போன வழி புலியூர் வழி. பலருக்கு அந்த வழி தெரியாமல் ஏதேதோ வழியில் போய்த் தடுமாறுகிருர்கள். மங்கையர் மயலிலே பட்டுத் தம் வாழ்க்கைப் பயணத்தை ஒரு வழியிலே நடத்துவார் பலர். பொருளே ஈட்டித் தம் நலம் ஒன்றே கருதிப் பிறருக்கு இட்டு உண்டு வாழாமல் வாழ்க்கையை நடத்துகிறவர்கள் போகிற வழி வேறு. இறைவனிடம் பக்தி பூணுமல் அவனே மறந்து உலகியலிலே சிக்கிப் போவார் ஒரு வழியில் செல்கிருர்கள். இந்த வழிகள் யாவும் இறைவனுடைய அருளேச் சாறும் நெறி அல்ல; புலியூர் வழி அல்ல. அவை போகும் ஊர் வேறு. மாணிக்கவாசகர் இத்தகைய புன்னெறிகளில் சாரா மல் புலியூர் வழியே போனராம்.