பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 வாருங்கள் பார்க்கலாம் துாமூரல் மடப்பாவையர் தோள் ஆசையில் ஆளாம் மாமூகரும் இட்டுண்டுயிர் வாழாதவர் தாமும் தீமூள்கர அரன்மேல் அளி செய்யாதவர் பலரும் போம் ஊர்வழி போகாதவர் புலியூர் வழிபோளுர். (மூரல்-சிரிப்பு. முகர்-ஊமைகள். தீ மூள் கர அரன்-தீ மூள்கின்ற கரத்தையுடைய சிவபெருமான். அளி-அன்பு.) - சிதம்பரத்தை அடைந்த மாணிக்கவாசகர் கோபுர வாயிலின் வழியே ஆலயத்துள் புகுந்து சிற்றம்பலநாதர் திருமுன் சென்ருர். எம்பெருமானேத் தரிசித்தார். தம் திருமுடிமேல் அடி வைத்து ஆட் கொண்ட குருவுருவமாகவே கண்டு களி கூர்ந்தார். "என் உயிரனைய அப்பா! உன் திருவருளின்படியே இங்கே வந்தடைந்தேன்’ என்று தொழுதார்; அழுதார். - பொன்னர்பொது கின்ருடிய புனிதன்றன முடிமேல் அந்நாள் அடி வைக்கும்பரன் ஆகும்படி கண்டார் மன்ன, உயிர் அன்னய், மணி மன்ரு சரண் என்று சொன்னர்பல கால் அன்பொடு தொழுதார்மிக அழுதார். (திருவாதவூரர் புராணம்