பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகத்தின் பொருள் 327 (பொது-அம்பலம். பரன்-குருநாதன். மன்ருமன்றில் ஆடுபவனே.) . . ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்தும் மிதந்தும் தம்மை மறந்து நின்ற மணிவாசகர் பிறகு பல திருப் பாடல்களேப் பாடினர். அத்தலத்தில் ஒரு பூம்பொழி லினுாடே தவச் சாலே அமைத்துக்கொண்டு அங்கே தங்கிச் சிவயோகம் புரிந்து வந்தார். குறியும் குணமும் இல்லாத கூத்தனது பஞ்சாட்சரமாகிய வாளால் கருவி கரணங்களாகிய காட்டை வெட்டி மனமாகிய நிலத்தை உழுது திருத்திச் சுத்தம் செய்து, சிவமென்னும் விதையை விதைத்துப் பசுபோதம் என்னும் களையைக் களைந்து, அருளாகிய நீரைப் பாய்ச்சி, ஞான உருவாய் விளைந்த பரமானந்த போக மாகிய விளேவைப் பெற்று நுகர்ந்தார். குறிகுணங்கள் கடந்ததனிக் கூத்தனுரு எழுத்தைந்தின் கொடுவாள் ஒச்சிப் பொறிகரணக் காடெறிந்து வீசிமனப் புலந்திருத்திப் புனிதம் செய்து . கிறைசிவமாம் விதைவிதைத்துப் பசுபோதம் களைந்தருள்நன் னீர்கால் பாய அறிவுருவாய் விளைந்ததனிப் பரானந்த அமுதருக்தா தருந்தி கின்ருர். (திருவிளையாடற்புராணம்) (குறி - அடையாளம், ஒச்சி வீசி எறிந்துவெட்டி. புலம் - நிலம். கால் பாய - அடியிலே பாய.) இப்படி இருக்கையில் இலங்கையிலிருந்து சில பெளத்தர்கள் தில்லைக்கு வந்து தங்கள் சமயமே