பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.8 வாருங்கள் பார்க்கலாம் சிறந்த சமயம் என்று முழங்கினர்கள். சைவ சமயம் தக்க சமயம் என்ருல் எங்களுடன் வாதிட்டு அதை நிலை நிறுத்துகள்' என்று அறைகூவினர்கள். அவர் களோடு வாதிட அஞ்சிய தில்லே மூவாயிரவர் அம் பலவாணரிடம் சென்று முறையிட்டார்கள். அப் பெருமான் ஒவ்வொரு தீட்சிதருடைய கனவிலும் தோன்றி, "இங்கே திருவாதவூரன் வந்து சிவயோகத் தில் இருக்கிருன். அவனே அழைத்து வந்து வாது கூறச் செய்யுங்கள்’ என்று கட்டளையிட்டார் அப் படியே அவர்கள் தவச் சாலைக்குப் போய் வாத வூரரை அழைக்க, அவர் வர மறுத்தார். இதல்ை கவலைக்குள்ளான தில்லைவாழ் அந்தணர் மீட்டும் அம்பலவாணரிடம் சென்று வணங்கித் துதித்தனர். நடராஜப் பெருமான் அவர்கள் கனவில் மீட்டும் தோன்றி, மாணிக்கவாசகன் என்று அழைத்தால் வருவான்' என்று அருளினர். அப்படியே அந்தணர் சென்று அழைத்தபோது, "இந்தப் பெயர் நமக்கும் நம்மை ஆட்கொண்ட இறைவனுக்குமே தெரியும். அதனை இவர்கள் எம்பிரரின் மூலமே அறிந்திருக்க வேண்டும்' என்று எண்ணி, இறைவன் திரு வருளாணே அது என்று நம்பினர். பிறகு பெளத்தர் களோடு வாதம் செய்ய ஒப்புக்கொண்டார். பெளத்தர்களோடு இலங்கை மன்னனும் அவனு டைய ஊமைப் பெண்ணும் வந்திருந்தார்கள். வாதம் செய்யும் பொருட்டுப் பெரிய சபை கூடியது. சோழ மன்னனும் வந்து சபையில் இருந்தான். பெளத்தர் கள் தம் சமயமே உயர்ந்ததென்றும் புத்தனே சிறந்த ஆசாரியனென்றும் வாதித்தனர். மாணிக்கவாசகர்