பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகத்தின் பொருள் 3.29 சைவ சமயத்தின் பெருமையைச் சொன்னபோது, அவர்கள் இழித்துக் கூறினர். உடனே மணிவாசகர் இலங்கை மன்னனுடைய பெண்ணேப் பார்த்துச் சில கேள்விகள் கேட்டார். சிவபெருமானிடத்தில் உள்ள அடையாளங்களின் உண்மை என்ன?’ என்ற முறையில் கேள்விகள் இருந்தன. ஊமையாக இருந்த அப்பெண் வாய் திறந்து அவற்றின் கருத்தை உரைத் தாள். அதைக் கண்ட இலங்கை மன்னன் வியந்து மாணிக்கவாசகரைச் சரண் அடைந்தான். பெளத்தர் கள் தோற்றுப் போயினர். இலங்கை மன்னன் சைவளுன்ை. மீட்டும் தம்முடைய தவச்சாலையில் புகுந்து இறைவன் திருவருள் நினைவில் ஒன்றிச் சிவயோக பரராக இருக்கலானுர் மாணிக்கவாசகர். ஒருநாள் சிவபெருமான் ஒர் அந்தண வேடங்கொண்டு கையில் சுவடியும் எழுத்தாணியும் ஏந்தி மாணிக்கவாசகரை அணுகினர். அவ்வேதியரைக் கண்ட மணிவாசகர், “தாங்கள் யார்? எங்கே வந்தீர்கள்?’ என்று கேட்க அவர், "நான் பாண்டி நாட்டில் இருப்பவன். திருப் பெருந்துறை நம் ஊர்” என்ருர், திருப்பெருந்துறை என்றதைக் கேட்டவுடன் மணிவாசகருக்கு உள்ளத் தில் ஒரு குதுகலம் உண்டாயிற்று. மிக்க பணி வோடு, என்னுல் ஆகும் காரியம் யாது?’ என்று கேட்டார். "நீர் அவ்வப்போது பாடியருளிய திருவாசகப் பனுவலே எ ழு தி க் .ெ க | ண் டு போக வந்தேன் அவற்றைச் சொல்ல வேண்டும்' என்ருர் வந்த அந்தணர், இதுவும் திருவருளே என்று எண் னிய வாதவூரர் அவர் விருப்பப்படியே தாம் பாடிய வற்றைச் சொல்லத் தொடங்கினர்.