பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 வாருங்கள் பார்க்கலாம் திருவாசகம் முழுவதையும் அவர் கூற ஏடு பிடித்து வந்த பெருமான் எழுதி முடித்தார். அப்பால், "உங்கள் திருவாக்காலே இந்தச் சிற்றம்பலத்தைப் பற்றி ஒரு கோவை பாடித் தரவேண்டும்' என்று வேண்டினர். மாணிக்கவாசகர் அப்படியே அகத் துறையில் நானுாறு பாடல்கள் அமைந்த திருகோவை யார் என்ற நூலே அருளினர். அதனேயும் ஏட்டில் எழுதிய பெருமான் கடைசியில், மாணிக்கவாசகர் மொழிந்தவாறே எழுதினேன். அழகிய திருச்சிற்றம் பல வாணனேன் கையெழுத்து’ என்று கைச்சாத்து இட்டு, ஏட்டை நன்ருகக் கட்டிக் கையில் கொண்டு மறைந்து போனுர். வந்தவர் தம்மையாட் கொண்ட பெருமானே என்று உணர்ந்த மாணிக்கவாசகர் ஆடிப் பாடி அழுது தொழுது ஆனந்தம் அடைந் தாா. : - மறு நா ள் காலேயில் நடராஜப் பெருமானப் பூஜை செய்யும் பொருட்டுத் தில்லைவாழ் அந்தணரில் ஒருவர் சிற்றம்பலம் சென்ருர். அங்கே பஞ்சாட் சரப் படியில் ஓர் ஏட்டுச் சுவடி இருப்பதைக் கண் டார். இது என்ன அதிசயம்!” என்று வியந்து அதை எடுத்துச் சென்று மற்றவர்களிடம் காட்ட, யாவரும் அதைப் பிரித்துப் பார்த்தார்கள். மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம் என்று உணர்ந்ததன்றி, அப்பாடல்கள் மனமுருக்கும் வகையில் இருப்பதைக் கண்டு இன்புற்ருர்கள் உடனே அதை எடுத்துக் கொண்டு மாணிக்கவாசகரிடம் போய் அதைக் காட்டி, "இப்புத்தகம் எப்படி வந்தது என்று தெரிய வில்லை’ என்ருர்கள். அவர் முதல் நாள் நிகழ்ந்த வற்றை எல்லாம் எடுத்துச் சொல்லி, எல்லாம்