பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வாருங்கள் பார் க.கலாம் சட்டைநாதர் என்ற பெயர் வந்தது. அவருக்கு ஒவ் வொரு வெள்ளிக்கிழமையிலும் நள்ளிரவில் பூசை நடைபெறும். அப்போது புனுகு சாத்துவார்கள், புனுகு சட்டத்திலிருந்து புனுகை எடுக்க இந்தக் கோயில் பிராகாரத்தில் தனி அறையே இருக்கிறது. சட்டைநாதரைத் தரிசிக்கும் பொருட்டுப் படியின் மேல் ஏறும்போதே கம்மென்று புனுகு வாசனை வீசும். உமாபாகர் கோயில் விமானத்தில் உள்ள ஒரு மூர்த்திதான் சட்டைநாதர். கம்பத்திளேயைைரப். போலத் தம்முடைய சக்தியினுல் மகிமை பெற்றவர் அவர். தேவஸ்தானத்தையே தம்முடையதாக்கிக் கொண்டவர். கோயில் பிராகாரத்தைச் சுற்றியுள்ள தாழ்வாரத்துக்குத் திருமாளிகைப் பத்தி என்று பெயர். திருமாளிகைப் பத்தியில் முத்துச் சட்டைநாதர் என்ற மூர்த்தி எழுந்தருளியிருக்கிருர். மேலே எழுந்தருளி யிருப்பவர் சுதை உருவமுள்ளவர்; முத்துச் சட்டை நாதர் சிலா வடிவமுடையவர். திகம்பரமும் தோல் சட்டையும் கிங்கிணி மாலையும் கையில் தண்டும் உடைய இவரைப் படம் எடுக்க முடிந்தது. திருமாளிகைப் பத்தியில் ஒரு பலி பீடம் இருக் கிறது. அங்கிருந்து மேலே பார்த்தால் சட்டைநாதர் சந்நிதி தெரியும். அந்தப் பலி பீடத்துக்கே தினமும் பூசை நடை பெறுகிறது. & . பிரமபுரேசர் கர்ப்பக்கிருகத்துச் சுவர்களில் சில சிற்ப உருவங்கள் இருக்கின்றன. நீண்ட தமிழால்: உலகை அளந்த குறுமுனிவர் தென்புறத்தில் எழுந் தருளியிருக்கிருர். மற்ருேரிடத்தில் கங்காவிசர் ஜனருடைய அற்புதக் கோலத்தைக் கண்டேன்.