பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 வாருங்கள் பார்க்கலாம் குப் பாற்கடலையே வருவித்து அளித்தான் சிவபெரு மான் என்பது ஒர் ஐதிஹ்யம். அந்தப் பாற்கடலே திருப்பாற்கடல் தீர்த்தம் என்ற சிறு குளமாக இருக் கிறது. - - பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான் என்று திருப்பல்லாண்டில் இக் கதை வருகிறது. சிறிய ஊர்களில் உள்ள குளங்களே பாதுகாப் பார் இல்லாமல் சிதைந்து கிடக்கும்போது சிதம்பரத் திலுள்ள திருப்பாற்கடல் தீர்த்தம் எப்படி இருக்கும்? அதன் கரையை ஒழுங்குபடுத்திக் கரையிலுள்ள மதில் சுவர்களில் எங்கெங்கோ இருந்த சிற்பத் திருவுருவங் களே எல்லாம் கொண்டு வந்து பதித்திருக்கிருர்கள். தீர்த்தம் பார்க்கலாமேயொழிய நீராடும் நிலையில் இல்லே. ~ . பச்சைத் தண்ணிர் வேண்டுமா, வெந்நீர் வேண்டுமா?’ என்று கேட்கிருர்கள் அல்லவா? குளிர்ந்த தண்ணிரைப் பச்சைத் தண்ணிர் என்று சொல்கிருேமே; உண்மையில் பச்சைத் தண்ணிர் இதோ இருக்கிறது” என்று நான் அந்தக் குளத்தைச் சுட்டிக் காட்டினேன். பாசி படர்ந்து ஒரே பசுமை யாகக் காட்சி அளித்தது குளம். அநேகமாகத் தலங்களில் உள்ள குளங்களில் பல இதுபோலவே, பச்சைத் தண்ணிரை உடையன என்பதை அறியாத வர்கள் யார்? - திருப்பாற்கடல் மடத்து எல்லைக்குள் நுழையும் போது வலப்பக்கத்தில் இந்தக் குளத்தைக் கண் டேன். இடப்பக்கத்திலே ஒரு சிறு கோயில் இருக்