பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏட்டில் ஏறிய வாசகம் மைா னிக்கவாசக சுவாமிகள், சில காலம் இங்கே தங்கியிருந்ததாகத் தெரிகிறது. அவர் அவ் வாறு தங்கிய இடம் என்று சொல்ல ஏதேனும் இருக் கிறதா?’ என்று அன்பர்களேக் கேட்டேன். மாணிக்க வாசகர் ஒரு தவச் சாலையை அமைத்துக்கொண்டு தங்கியிருந்த செய்தியையும், அப்போது இறைவன் எழுந்தருளி வந்து திருவாசகத்தையும் திருக்கோவை யாரையும் எழுதி இறுதியில் தன் கையெழுத்தையும் இட்டான் என்ற செய்தியையும் புராணங்கள் சொல் கின்றன அல்லவா? அவர் தங்கியிருந்த இடத்தை இப்போது பாதுகாத்து வருகிற்ர்களா என்பதை அறியும் ஆவலுடன் இந்தக் கேள்வியைக் கேட் டேன். - “ஆம் இருக்கிறது. இந்த ஊரில் திருப்பாற்கடல் என்ற தீர்த்தம் இருக்கிறது. அதனேச் சார்ந்த ஓரிடத் தில் மாணிக்கவாசகர் தங்கியிருந்ததாகச் சொல்கிருர் கள்’ என்று அன்பர்கள் சொன்னர்கள். "அப்படியாளுல் அந்த இடத்தைப் போய்ப் பார்ப் போம்” என்று சொல்லவே, யாவரும் திருப்பாற்கடல் தீர்த்தம் உள்ள இடத்தை நோக்கிப் புறப்பட்டோம். வடக்குத் திருவாசலில் இருந்து தில்லேக் காளியம்மன் கோயிலுக்குப் போகிற வழியில் அந்த இடம் இருக் கிறது. பரந்த வெளியும் அதற்கு அருகில் குளமும் கோயில்களும் இருக்கின்றன. உபமன்யு முனிவர் குழத்தையாக இருந்த போது அழுதாராம். அவருக்