பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34} வாருங்கள் பார்க்கலாம் திருப்பார்கள். சிவபெருமானவிடப் பெரிய செல்வன் யார் ? அப்பெருமான் எழுத்து வேலையை, "நீ செய்: என்று ஒருவனிடம் ஒப்பித்துவிட்டான். தாமரைப் பூவில் வாழும் நான்முகன் ஓயாமல் ஒழியாமல் தலை களின்மேல் எழுதிக் கொண்டே இருக்கிருன். சிவ பெருமான் ஒரு நூல் இயற்றின்ை. அது எழுதப் படாமலே இருப்பதனுல் அதற்கு எழுதாக் கிளவி என்றே பெயர் உண்டாகி விட்டது. வேதத்தைச் சுருதி என்றும், கேள்வி என்றும், எழுதாக் கிளவி என்றும் சொல்வதை நாம் அறிவோம். இவ்வாறு செய்துவிட்டு எழுத்து வேலையே இல்லாமல் இனிதாக அமர்ந்திருக்கிருன் மகாதேவன். இத்த கைய பெருமான எழுதும்படி செய்துவிட்டார், மாணிக்கவாசகர் ஒன்ரு, இரண்டா? பலபல பாடல் களைச் சொல்லி எழுதச் செய்தார். எழுதியாயிற்ரு? இதையும் எழுதுங்கள்' என்று நூற்றுக் கணக்கான பாடல்களைச் சொல்லி எழுதும்படி செய்து வேலை வாங்கின. பெரியவர் அவர். அதோடு இன்னர் எழுதி ஞர் என்பது தெரியக் கடைசியில் கையெழுத்தும் இடும்படிச் செய்தாராம். அவருடைய பாதங்களேத் தலையாலே வணங்குவோம். - இவ்வாறு மாணிக்கவாசகர் துதியை நாகப்பட் டின புராணத்தில் பிள்ளேயவர்கள் அமைத்திருக் கிருர்கள்.