பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 { வாருங்கள் பார்க்கலாம் கிறது. அப்போது மடாதிபதியாக இருந்தவர் ஒன்ப, தாம் பட்டத்தில் தலைவராக இருந்தார். ஆகவே, அவருக்கு முன் எட்டுப் பேர் ம. டா தி பதி கள்ாக இருந்திருக்க வேண்டும். மடத்தைச் சார்ந்த வர்கள் இந்த மடத்தின் முதல் ஞானசிரியர் மாணிக்கவாசகர் காலத்திலேயே இருந்தவர் என்று சொல்கிருர்கள். மேலே சொன்ன கல்வெட்டைக் கொண்டு பார்த்தால் முதல் மடாதிபதி அவ்வளவு பழங்காலத் தில் இருந்தார் என்று சொல்ல இயலாது. அவர்கள்: சொல்லும் வரலாற்றையும் கொஞ்சம் தெரிந்து கொள் 6tsäljisis). மாணிக்கவாசகர் மன்றந்த நாளுக்குப் பின் நாளில் பஞ்சாட்சரப்படியில் இருந்த திருவாச கத்தைத் தில்லேவாழ் அந்தணர்கள் எடுத்து வைத் திருந்தார்கள். அதனைத் தங்களுக்குத் தரவேண்டு மென்று அங்கே குழுமியிருந்த மடாதிபதிகளும், சிவ னடியார்களும், மற்றும் பல அன்பர்களும் கேட்டார் கள். அவர்கள் மறுத்தார்கள். அப்போது அசரீரியாக ஒரு குரல் கேட்டது. இந்தச் சுவடியைச் சிவ. கங்கையில் கொண்டுபோய் விடுங்கள். அது யாரு டைய கரத்தில் சேர்கிறதோ அவரே. அதற்கு உரிய வராவார்’ என்றது அக்குரல். அப்படியே அந்தணர்கள் அச்சுவடியைத் தங்கத் தாம்பாளத்தில் வைத்துச் சிவகங்கையில் விட்டார்கள். அப்போது அது கரையில் நின்றிருந்த