பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏட்டில் ஏறிய வாசகம் 345 வீர சைவர் ஒருவரிடம் வந்து சேர்ந்தது. அவரே அம்பலத்தாடுவார். அவர் சுவடியைத் தம் பூஜை யில் வைத்துப் போற்றிப் பூசித்து வந்தார். அவருடைய பெருமையை உணர்ந்து யாவரும் பாராட்டினர். அம்பலத்தாடுவார் ஒன்பது கட்டுகள் கொண்ட மடம் அமைத்துப் பலருக்கு ஞான உப தேசம் செய்துகொண்டு வாழ்ந்தார். அவர் பரி பூரணம் அடைந்த பிறகு வழிவழியே துறவிகள் அந்த மடத்துக்குத் தலைவர்களாக இருந்து திரு வாசகம் உள்ள பெட்டகத்தைப் பூசித்து வருகிருச் -566ss. இதுதான் அந்த வரலாறு. சிதம்பரத்தில் இப்போது அம்பலத்தாடுவார் மடம் வெறும் கீற்றுக் கொட்டகையாக இருக்கிறது. அம்பலத்தாடுவார் சுவாமிகளின் சமாதியில் ஒரு சிவ லிங்கப் பெருமானேயும், நடராஜ மூர்த்தியையும் வைத்துப் பூசித்து வருகிருர்கள். வேறு ஓரிடத்தில் அம்பலத்தாடுவார் பூசித்த மூர்த்திகள் சிலவற்றை வைத்து வழிபடுகிருர்கள். எல்லாப் பூஜையும் வீர சைவர்கள் நடத்தி வருகிருர்கள். புதுச்சேரியில் இருக்கும் இந்த மடத்தின் தலைவர் கள் பூசித்து வரும் திருவாசகப் பெட்டகத்தை யாரும் திறந்து பார்த்தால் தீங்குவரும் என்று சொல்கிருர்கள். திருவாசகத்திற்கே அமைந்த சிறப்புக்களுள் ஒன்று அதனே எழுதிய ஏடு பூஜைக்கு உரியதாக