பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டில் ஏறியவாசகம் 347 உள்ளத்திலே இடம் கொண்டிருக்கிறது. மாணிக்க வாசகர் ஒளியில் கலந்து மறைந்த இடமும், மணிவாக் காகிய திருவாசகம் ஏடாக உருப்பெற்று வெளியிட்ட இடமும் தில்லையாகிய கோயிலே. "சைவ சமய ஆசாரியர்களாகிய நால்வர் பாடிய தலங்கள் எவ்வாறு இருக்கின்றன? அங்கே என்ன என்ன சிற்பங்கள் உள்ளன? சரித்திரத்திற். குரிய செய்திகள் யாவை ? இலக்கியத் தொடர்பு உண்டா ? என்று ஆராயவேண்டும் என்பது என் ஆசை. நால்வரும் போய்ப் பாடிய தலங்களுக்கு எல்லாம் சென்று அங்குள்ள செய்திகளையும் காட்சி களேயும் தொகுத்து வெளியிடுவதென்பது ஒரு தனி மனிதனுல் செய்து நிறைவேற்றக்கூடியது அல்லவே. ஆதலால் ஏதேனும் ஒரு வரையறை செய்து கொண்டு ஓரளவுக்கு இந்த நோக்கத்தைச் செயலாற். றலாம் என்று எண்ணினேன். நால்வரும் திருவவ தாரம் செய்த தலங்கள், அருள் பெற்ற இடங்கள், முத்தி பெற்ற திருப்பதிகள் ஆகியவற்றைப்பற்றி மாத்திரம் எழுதலாம் என்று தோன்றியது. அப்படியே சீகாழியில் தொடங்கின. இந்த யாத்திரை சிதம்பரத் தில் வந்து நிறைவேறியது. போன இடங்களில் அன்பர்கள் வரவேற்று உபசரித்ததைச் சொல்வதா ? அங்கங்கே வழங்கும் வரலாறுகளே ஆர்வத்துடன் தெரிவித்ததைச் சொல்வதா? தலங்களின் சம்பந்த மான நூல்களே உதவிய உபகாரத்தைச் சொல்வதா ? அத்தகைய ஆதரவு இல்லாவிட்டால் இவ்வளவு செய்திகளேத் தொகுத்திருக்க முடியாது.