பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதியும் வீதியும் 27 விஷயங்கள் பல உண்டு. குருலிங்க சங்கமம் என்பது ஒருவகை அடுக்கு. குரு என்பது ஞானசிரியரைக் குறிப்பது. லிங்கம், இறைவன். அடியாரைச் சங்கமம் என்பர்; நடமாடும் கடவுள் ஆதலின் சங்கமர் என்ற பேர் வந்தது. சீகாழியைக் குருலிங்க சங்கம ஸ்தலம் என்று சொல்வார்கள். பலருக்கு ஞான உபதேசம் செய்த உமாபாகர் குருமூர்த்தி; சிவலிங்கப் பெருமா கிைய பிரமபுரேசர் லிங்கம்; பைரவராகிய சட்டை நாதர் சங்கபர். புராணத்தில் சொல்லாமல் இருந்தாலும் எனக்கு இன்னும் சில மூன்றுகள் தோன்றின. இங்கே குளம், ஆறு, கடல் மூன்றும் இருக்கின்றன. கடல் எங்கே? என்று கேட்டு விடாதீர்கள். முன்பே சொல்லியிருக் கிறேன், இது காவிரிப்பூம்பட்டினத்தை அடுத்த தென்று. ஆகையால் இது கடற்கரையில் இருப்ப தாகவே கருதுவதற்குரியது. இது என் கற்பனை அல்ல. சம்பந்தரே அதற்குச் சாட்சி சொல்கிறர். பாயோங்கு மரக்கலங்கள் படுதிாைடால் மொத்துண்டு சேயோங்கு வேணுபுரம் செம்பதியசத் திகழ்ந்திரே, நெருக் குறு கடல்திரைகள் முத்தமணி சிந்தச் செருக்குறு யொழிற்பொலி திருபபுகலி பாமே. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றும் சிறந்த இடம் இது. தேவாரம், புராணம், மற்றத் துதிகள் என்று மூன்று வகையான பாடல்களைப் பெற்ற தலம் இது. இன்னும் அடுக்கிக் கொண்டு போகலாம்.