பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வாருங்கள் பார்க்கலாம் கோயில். பிராகாரம் தனியே உண்டு. அங்கேதான் லிங்கமும் அதன்பின் ஞானசம்பந்தர் உருவமும் இருக்கின்றன. ஞானசம்பந்தரைத் தரிசித்துக்கொண்டு வந்தால் அக்கோயிலே அடுத்து அம்பிகையின் கோயில் இருக்கிறது. திருநிலைநாயகி என்று தமிழிலும், ஸ்திர சுந்தரி என்று வடமொழியிலும் அம்பிகையின் நாமங்கள் வழங்குகின்றன. அம்மை கோயிலுக்கு முன்பும் வடபுறத்திலுமாகப் பிரம தீர்த்தம் இருக் கிறது. பிரம தீர்த்தத்தின் தென் கரையில் ஒரு பக்கம் சின்னப் புரைகளில் ஞானசம்பந்தர் உருவமும், மறு பக்கம் அவர் தந்தையார் உருவமும் இருக்கின்றன. இந்த இடத்தில்தான் திருமுலேப் பால் உற்சவத்தன்று சம்பந்தர் திருமுலைப் பாலைப் பெறும் நிகழ்ச்சி நடை பெறும். . சிவபெருமானுக்கும் அம்பிகைக்கும் நடுவில் முருகன் இருக்கும் அமைப்பு ஒன்று உண்டு. அந்தக் கோலத்தில் உள்ள பெருமானைச் சோமாஸ்கந்தர் என்று சொல்லுவார்கள் ; உமாதேவியுடனும் ஸ்கந்த ருடனும் உள்ளவர் என்பது அந்தத் தொடருக்குப் பொருள் திருஞான சம்பந்தர் முருகனுடைய திருவவதாரம் என்று கொள்வது ஒரு மரபு. அதன் படி இத் திருக்கோயிலில் சோமாஸ்கந்த மூர்த்தி அமைப்பில் பிரமபுரீசர் கோயிலுக்கும் திருநிலை நாயகி திருக்கோயிலுக்கும் இடையில் ஞானசம்பந்தர் திருக் கோயில் இருக்கிறது. . மற்ருெரு சிறப்பும் இந்தக் கோயிலில் இருப்ப தாகச் சொல்லுவார்கள். மூன்று மூன்ருக அடுக்கும்