பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதியு விதியும் அப்பைய தீட்சிதர் என்ருல் வேதாந்த சாஸ்திரம் படித்தவர்களுக்கு நன்ருகத் தெரியும்; வடமொழி வித்துவான்களுக்கும் தெரியும். அவர் வடமொழியில் மகாபண்டிதர்; வேதாந்தத்தில் சிங்கம்; பரம சைவர். அவர் எத்தனையோ நூல்களை யும் வியாக்கியானங்களேயும் எழுதியிருக்கிருர். ராஜ ராஜாக்களிடம் பல பல சம்மானங்களைப் பெற்றிருக் கிருர். அவர் ஒரு சமயம் தம்முடைய மாமனர் ஊருக்குப் போளுர். காதிலே குண்டலங்கள் அசைய, மேலே சால்வை பளபளக்க, மத்த கஜம் போல அவர் நடந்து வந்தார். அவரை ஊரிலுள்ள பெண்கள் வாயிலில் தலையை நீட்டி நீட்டிப் பார்த்தார்கள். நாலு பேராகக் கூடியும் பார்த்தார்கள். ஒருத்தி, யாரடி இந்தப் பிராமணன்? என்று கேட்டாள். "இவர்தாண்டி நம் ஆச்சாள் ஆம்படையான்' என்று வேறு ஒருத்தி பதில் சொன்னுள்; கொஞ்சம் உரக்கவே சொன்னுள். அது அப்பைய தீட்சிதர் காதிலும் விழுந்தது. அவர் உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்டார். அவரை அந்தப் பெண்மணி மகா வித்துவான் என்று சொல்லவில்லை; பெரிய நூலாசிரி யர் என்று குறிப்பிடவில்லை; வேதாந்த சாஸ்திர நிபுணர் என்று சுட்டவில்லை; சிவபக்தர் என்றும் சொல்லவில்லை. ஆச்சாள் ஆம்படையான் என்று தான் சொன்னள். அவர்களுக்கு ஆச்சாளத் தெரியும்; அவள் மூலமாகத்தான் அப்பைய தீட்சி , தரைத் தெரிந்து கொண்டார்கள். அவளுடைய