பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதியும் வீதியும் 33 கல்யாணக் கோலாகலம் நம்முடைய திருஞான சம்பந்த மூர்த்திக்குத்தான் திருமணம் நிகழப் போகிறது. பதினறு வயசு நிரம்பி அழகு பொங்கும் அற்புத மேனியோடு சிவப்பொலிவு திகழ விளங்கு கிருர் அவர். ஞானசம்பந்தர் முதலில் கல்யாணம் செய்து கொள்ள இசையவில்லையாம். பெற்றேர்களும் மற்றேர்களும், திருமணப் பருவம் வந்துவிட் --து; மனம் செய்தருள வேண்டும்’ என்று கொன்னர் களாம். மாதவத்தின் கொழுந்தனேய சம்பந்தர் சுற்றத் தொடக்கை விரும்பாதவராய், வயசால்ை என்ன ? திருமணம் வேண்டாம்' என்றும். மறையவராகப் பிறந்தமையாலும் வேத நெறி தழைக்கச் செய்யக் கங்கணம் கட்டி க் கொண்டமை யாலும் அந்தண் ர்களுக்குரிய ஆறு தொழில்களும் செய்ய வேண்டும்; அதற்குத் திருமண்ம் செய்து கொள்வது இன்றியமையாதது” என்று பழுத்த முது மறையவர்கள் கூற, இறைவன் திருவருளே எண்ணி அவர் உடன்பட்டார். - - இந்தத் திருப்பெருமண நல்லூரில் இருந்த நம்பாண்டார் நம்பியின் பெண்ணேப் பேசினுர்கள். அப்போது இதற்கு நல்லூர் என்ற பெயர்தான் வழங்கி வந்தது. கல்யாணத்துக்கு வேண்டிய காரியங்க ளெல்லாம் முறையாக நடைபெற்றன. மாப்பிள்ளேயும் வந்துவிட்டார். அவருடன் சிவபக்தர் கூட்டமும் வந்தது. திருநீலநக்க நாயனர், முருக நாயனர், திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனர் ஆகிய நாயன் மார்களும் வந்திருந்தார்கள். . வா. பா - 8