பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வாருங்கள் பார்க்கலாம் இந்த ஒப்புமை நாகைக் கண்டு பிடித்தது அன்று. என்னுடைய ஆசிரியருக்கு ஆசிரியராகிய மகாவித்துவான் மீட்ைசிசுந்தரம் பிள்ளையவர்கள் சொல்லியிருக்கிருர். அவர் இந்த ஊருக்கு வந்தபோது இங்குள்ளவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இங்கே எழுந்தருளியிருக்கும் திருவெண்ணிற்றுமை யம்மையைப்பற்றி ஒரு பிள்ளேத்தமிழ் பாடினர். அதில் ஒரு பாட்டில் இந்தக் கருத்தைச் சொல்லி யிருக்கிருர். வண்கால் என்ன வாய்என்ன வாய்க்கால் எனக்கால் வாய்எனப்பேர் மருவி மாரு வளங்கொள்கமை மான கல்லூர்ப் பெருமணம் வான் எண்கா கல்லூர்ப் பெருமணம், ஏர் ஏய்பெ ருமண கல்லூர் என்று இலகு பெயர்பூண் டுறுவளம்ஏய்ந்து என்றும் விளங்கும் இக்நகரை. தம் பெயருக்கும் இந்தத் தலத்தின் பெயருக்கும் இத்தகைய ஒப்புமை இருப்பதை எண்ணி இந்த ஊரைச் சுற்றிப் பல கால்வாய்கள் சூழ்ந்திருக்கின்றன வாம். இப்படி ஒரு கற்பனையை அக்கவிஞர் பாடி யிருக்கிருர். 2 ஊருக்குச் சிவலோகம் என்று பெயர் உண்டு. ஆல்ை இப்போதுதான் இது உண்மையாகவே சிவலோகமாக விளங்குகிறது. எங்கே பார்த்தாலும் திருநீற்றின் ஒளி, எங்கே பார்த்தாலும் ருத்திராட்சக் காட்சி; ஹர ஹர என்ற முழக்கம். ஒரே கோலாகலம்;