பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதியும் வீதியும் 3懿 யாகிய ஆத்தாள் பிறந்த இடம் ஆனதால் ஆத்தாள் புரமாகி அதுவே ஆச்சாள்புரம் என்று மருவியது” என்று சொல்கிறவர்களும் இருக்கிருர்கள். வேறு ஒருவரை, “இங்கே யாராவது ராஜம்மாள் என்ற பெயரோடு யாவரும் புகழும் வண்ணம் இருந்த, துண்டா ?’ என்று கேட்டேன். இங்க்ே இரண்டு மைல் தூரத்தில் ஒரு தோப்பு இருக்கிறது. அங்கே ஒர் அம்மையாரின் சமாதி இருக்கிறது. மிகவும் சக்தி யுள்ளவர் என்று சொல்கிருர்கள். ஒரு க ல் அவருடைய பெயர் நீங்கள் சொல்கிற மாதிரி இருக்க லாம்' என்று அவர் சொன்னுர். வேறு சிலர், "ஆசார்யபுரம் என்பதே அப்படி மருவியது. சைவ சமயாசாரியராகிய திருஞான சம்பந்தர் சோதியுட் புக்க தலம் ஆதலின் அவர் பெயரால் இந்தப் பெயர் வந்தது' என்கிருர்கள். இத்தனை ஆராய்ச்சி செய்தும் இன்னும் இதுதான் ஆச்சாள்புரம் என்னும் பெயருக்குக் காரணம் என்று தெரிந்துகொள்ள முடிய. வில்லை. தேவாரத்திலும் இலக்கியத்திலும் இந்த ஊருக்கு நான்கு வகையாகப் பெயர் வழங்குகிறது. நல்லூர் என்பது ஒரு பெயர்; பெருமணம் என்பது ஒரு பெயர்; நல்லூர்ப் பெருமணம் என்பது ஒரு நாமம்; பெருமன. நல்லூர் என்று ஒரு பெயர். வாய்க்கால் இருக்கிறதே;. அதைக் கால் என்றும் சொல்வார்கள்; வாய் என்றும் சொல்வதுண்டு. இரண்டையும் சேர்த்துக் கால்வாய், என்றும், வாய்க்கால் என்றும் சொல்வது வழக்கம். திருப் பெருமண நல்லூராகிய ஆச்சாள்புரத்தின் பெயரும் அப்படித்தான் நான்கு வகையாக மாறி, வழங்குகிறது. . -