பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதியும் வீதியும் 35 யாவரும் சோதியில் ஒவ்வொருவராகப் புகக் கடைசி யில் தாமும் தம் மனேவியுடன் எழுந்தருளினர். சோதி மல்ே ஒன்று தோன்றிற் றதில்ஒரு வீதிஉண் டாச்சுதடி என்று இராமலிங்க சுவாமிகள் பாடுகிருர். அவர் இந்தச் சோதியையும் வீதியையும் நினைந்துதான் யாடினுரோ, யாதோ, தெரியவில்லை. திருஞான சம்பந்தருடைய திருமணம் நடந்ததனுல் இந்த ஊருக்குப் பெருமண நல்லூர் என்று பெயர் வந்த தாம். . 3 - கோயிலுக்குப்போனேன். சந்நிதி கிழக்குநோக் கியது. சந்நிதியில் ஒரு குளம் இருக்கிறது. அதற்குப் பஞ்சாட்சர தீர்த்தம் என்று பெயர். கோயில் மிகப் பெரியதும் அன்று; மிகச் சிறியதும் அன்று. முன்னல் பழைய கோபுரம் இருக்கிறது. நேரே சென்று சுவாமி யைத் தரிசித்தேன். சிவ பெ ரு மா ன் திருநாமம் சிவலோகத்தியாகர். இங்கே பல முனிவர்களுக்கும் அன்பர்களுக்கும் சிவலோகக் காட்சியை இறைவன் காட்டியதால் அப்பெயர் வந்ததென்று புராணம் சொல்கிறது. சுவாமி சந்நிதியில் நூற்றுக்கால் மண்ட பத்தில் திருஞானசம்பந்தர் தம் மனைவியாரோடு எழுந்தருளியிருக்கும் திருக்கோயில் இருக்கிறது, கல்யாணசம்பந்தர் என்று சொல்கிருர்கள். அவரைத் தரிசித்துக்கொண்டேன். அர்ச்சகர் ஓர் அர்ச்சஆன .ெ சய் தார். அது திருஞானசம்பந்தருக்கென்று அமைந்த தனி அர்ச்சனே. சீகாழியில் ஞானசம்பந் தருக்கு முருகப் பெருமானுடைய அஷ்டோத்