பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வாருங்கள் பார்க்கலாம் தரத்தையே சொல்லி அர்ச்சனே செய்கிருர்கள். இங்கே அர்ச்சனையைக் கூர்ந்து கவனித்தேன். கடைசியில் திருஞானசம்பந்தருடைய மனேவியார் திருநாமம் வரும் என்று ஆவலோடு கவனித்தேன். ஆச்சாள் என்ற பெயருக்குரிய மூலத்தைக் கண்டு பிடித்து விடவேண்டும் என்று ஆசை. நூற்றெட்டுத் திருநாமங்கள் முடிந்தன. "ஸ்தோத்திர பூரணி சமேத ரீ ஞானசம்பந்தமூர்த்தி...” குரு க் க ள் அர்ச்சனையைச் சொல்லி முடித்தார். திருஞான சம்பந்தப் பெருமானுடைய பத்தினியின் திருநாமம் ஸ்தோத்திர பூரணி என்று தெரிந்து கொண்டேன். இந்தப் பெயருக்கு என்ன காரணம்? திருஞான வுலகில் திருவவதாரம் செய்து தேவாரம் பாடினர். அவைசிவபெருமானுடைய தேசத்திரங்கள். அவர் திருமணத்தன்று பாடியவையே இறுதித் தோத் திரங்கள். திருஞானசம்பந்தப் பெருமானுடைய தேவாரம் அன்ருேடு முற்றுப் .ெ ப ற் ற து; அந்தத் தோத்திரத்தைப் பூரணமாக்க வந்தவரைப் போல அவருடைய மனேவியார் விளங்குகிருர். அதனல் ஸ்தோத்திர பூரணி என்று பெயர் ஏற்பட்டதோ? வேறு காரணம் தெரிகிற வரையில் இப்படி வைத்துக் கொள்வதில் என்ன தவறு? அவ்விருவருடைய உற்சவ விக்கிரகங்களும் திருக்கோயிலுக்குள் இருக்கின்றன. கையில் பாற் கிண்ணத்தோடு மூன்ருண்டு உருவமுடைய சம் பந்தர் விக்கிரகமும் தனியே இங்கே இருக்கிறது.