பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதியும் வீதியும் 37 “இவை பழங்கால முதலே இருந்துவரும் விக்கிர கங்கள்தாமா?’ என்று அயலில் உள்ளவர்களைக் கேட்டேன். - என் கண்ணே அருகி லே ஒடவிட்டேன். நீயே தெரிந்துகொள்' என்பது போல அங்கே திரி புரசங்காரர் நி ன் று கொண்டிருந்தார். "இது அல்லவா கலேப்படைப்பு!” என்று வியந்து தின்றேன். வேறு சில பழைய விக்கிரகங்களும் இருந்தன. அவற்ருேடு ஒப்பு நோக்கும் போது சம்பந்தருடைய திருமேனிகள் நிச்சயமாகப் பிற்காலத்தில் அவசரத் தில் அமைக்கப் பெற்றவை என்றே புலப்பட்டது. அப்போதுதான் கோயிலின் தர்மகர்த்தா ஒரு விஷயத்தைச் சொன்னுர். அவரைப்பற்றிச் சொல்ல மறந்து விட்டேன். தாடியுடன் திருநீறு சண்ணித்த மேனியுடன், அடியேன்” என்ற பணிவுப் பேச்சுடன் நிற்கும் அவரைப் பார்த்தாலே இவரும் ஒரு நாயனுரோ என்று தோன்றும். கோயில்களில் தக்க வர்களே அதிகாரியாக வைத்துப் பாதுகாத்துவரும் தருமபுர ஆதீனத்தினர் இவரைப் பொறுக்கி இந்த ஆலயத்தை ஒப்பித்திருக்கிருர்கள். - பூமோன் வைத்தியலிங்கம் பிள்ளையவர்கள் ஒரு சரித்திரச் செய்தியைச் சொன்னுர். "இந்த ஊரில் ஒரு யுத்தம் நடந்ததென்று தெரிகிறது” என்ருர், “எப்போது ? யாருக்கும் யாருக்கும் ?? 'கும்பினிக்காரர்களுக்கும் தஞ்சை மன்னருக்கும் இடையே போர் நிகழ்ந்தது, அப்போது லாரென்ஸ்"