பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வாருங்கள் பார்க்கலாம் என்ற துரை இந்தக் கோயிலக் கைப்பற்ற வந்தா ராம். இங்கு இருந்தவர்கள் அவர் காலில் விழுந்து கோயிலே ஒன்றும் செய்யவேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்களாம். இது இருநூறு வருஷங்களுக்கு முன் நடந்த செய்தி” என்ருர். 'கும்பினிக்காரர்கள் பழைய விக்கிரகங்களே எடுத்துக் கொண்டு போயிருக்கலாம். திருஞான சம்பந்தர் திருவவதாரத் தலமாகிய சீகாழியில் உள்ள சம்பந்தர் உற்சவ விக்கிரகம் மிகப் பழையதாக இருக்கிறது. அப்படியே இங்கும் இருந்திருக்க வேண் டும். அப்பெருமான் திருமணக் கோலத்தோடு எழுந் தருளியிருக்கும் பழைய விக்கிரகத்தை அந்த வெள்ளேக்காரன் எடுத்துக்கொண்டு போயிருப்பான். அந்தத் துரையின் பெயர் என்ன?” ஆச்சாவுக்கும் அவன் பெயருக்கும் ஏதாவது முடிச்சுப் போடலாமோ என்ற எண்ணத்தால்தான் கேட்டேன். லாரென்ஸ் துரை” என்று மறுபடியும் அவர் சொன்னபோது எனக்குச் சப்பிட்டுவிட்டது. "அவன் பேர் எதுவாக இருந்தால் என்ன?’ என்று என் ஆராய்ச்சியை நிறுத்திக் கொண்டேன். இந்தப் போரைப்பற்றிய செய்திகள் தஞ்சை ஜில்லா கெசட்டியரில் இருக்கிறதாம். இந்தச் சண்டை 1749-இல் நடைபெற்றதாகத் தெரிய வந்தது. இறைவன் திருக்கோயிற் கோபுரத்தை அன்பர் காட்டி, “அதோ பாருங்கள்!” என்ருர். அவர் எதைச்