பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாருங்கள பாாககலாம தமிழ் நாடு கோயில்களுக்குப் பேர் போன நாடு, தெய்வ பக்தியிலும் சிறந்த நாடு. தெய்வங்களை நாயகர் களாகக் கொண்ட சொற்கோயில்களுக்கும் கற்கோயில் களுக்கும் தலைமையான இடத்தைத் தமிழ்நாட்டில் கொடுத்து வருகிருர்கள். அன்ருட வாழ்க்கையிலும், வாழ்க்கையின் முக்கியமான நிகழ்ச்சிகளிலும் தெய்வ உணர்ச்சி விரவி நிற்கிறது. - இங்கே ஆழ்வார்களும் நாயன்மார்களும் திருவவ தாரம் செய்து பக்தி நெறியைப் பின்னும் ஆழமாகவும் விரிவாகவும் வேரூன்றிப் படரச் செய்திருக்கிருர்கள். அவர்கள் பாடிய திருப்பாடல்கள் தலங்களுக்குப் புதிய பெருமையை உண்டாக்கியுள்ளன. பாடல் பெற்ற தலம் என்ருலே தனிச் சிறப்பு உண்டு. இந்நாட்டிலுள்ள கோயில்கள் தெய்வங்கள் உறையும் இடங்களாக மட்டும் விளங்கவில்லை. கலைகளுக்கு உறைவிடமாகவும் அவை உள்ளன. சிற்பமும், சங்கீதமும், நடனமும், உணவுக் கலையும், மலரலங்காரக் கலையும், பொற்கலக் கலையும், இலக்கியமும் கோயில்களை மையமாக வைத்துப் படர்ந்து வந்திருக்கின்றன. நாட்டு வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்குரிய கல்வெட்டுக்களையும் கோயில்களிலே தான் காணுகிருேம். நாளடைவில் கோயிற் சிற்பமும் வழிபாட்டு முறையும் வளர்ந்துகொண்டே வருகின்றன. தமிழ்நாட்டுக்கு வரும் பிற நாட்டார் இந்த நாட் டிலுள்ள திருக்கோயில்களைக் கண்டு பிரமித்துப் போகிருர்கள். தல யாத்திரையைச் சமய வாழ்விள் பகுதியாகக் கொண்ட இந்திய மக்களோ இத்தலங் களுக்குச் சென்று தரிசிப்பதில் சலிப்பே கொள்வதில்லை. ஊ ரு க் கு ஊ ர் .ே க யி ல் கள் இருக்கின்றன. :ஊரானேர் தேவகுலம்’ என்பது பழைய உரையாசிரி