பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iw யர்கள் காட்டும் மேற்கோள் வாக்கியம். திருக்கோயில் இல்லாத திருவில் ஊரும் என்பது அப்பர் அருள் வாக்கு. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பது பழங்காலமுதல் வழங்கும் மொழி. இவற்ருல் ஒவ்வோர் ஊரிலும் திருக்கோயில் இருக்கவேண்டும் என்ற வரையறை தமிழர் வாழ்வில் இருந்து வருவதை உணரலாம். . தமிழ்நாட்டிலுள்ள கோயில்கள் அத்தனையையும் தரிசித்து, அந்த அந்தக் கோயில்களின் மாகாத்மியத் தையும், சரித்திரத்தையும், அங்குள்ள சிற்பச் சிறப் பையும் தெரிந்துகொள்ள வேண்டுமானல் ஒரு மனித ஆயுள் போதாது. கோயில்களின் சிறப்பை விரிவான முறையில் எழுதப் புகுந்தால் பல கோயில்களுக்குத் தனித்தனி ஒவ்வொரு புத்தகமே எழுத வேண்டி யிருக்கும். மேல்நாட்டினரைப் போன்ற கலையார்வமும் போதிய வசதிகளும் இருந்திருந்தால் இத்தனை காலத்தில் நூற்றுக்கணக்கான புத்த க ங் க ள் வந்திருக்கலாம்" தமிழ்ப் புலவர்கள் ஒவ்வொரு தலத்திற்கும் புராணங்களும் பிரபந்தங்களும் பாடிக் குவித்திருக்கிருர்கள். அவர்களுடைய பக்தியையும் புலமையையும் விளக்கிக் கொண்டு அவை நிலவுகின்றன. திருவிளையாடற் புராணம், சீகாளத்திப் புராணம், திருக்குற்ருலத் தல புராணம் முதலிய பல புராணங்கள் சிறந்த இலக்கியங்களாக விளங்குகின்றன. அவர்களுக்கு இருந்த ஆர்வத்தில் ஒரு பகுதி நமக்கு இருந்தால், இந்தக் காலத்தில் விஞ்ஞானத்தின் உதவியால் நமக்குக் கிடைத்திருக்கும் வசதிகளே வைத்துக் கொண்டு பல படங்களுடன் புதிய முறையில் தலங்களைப் பற்றிய நூல்களை எழுதியிருக்கலாம். - . சைவ சமயாசாரியர்களின் திருப்பாடல்களைப் பெற்ற தலங்கள் பல. அவர்கள் பாடியருளிய பாடல்கள் முழுவதும்