பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பர் உதித்த ஊர் 45: முன் அப்பர் சுவாமிகள் மடம் என்று ஒரு கட்டிடம் பெரிய சாலையின்மேல் இருக்கிறது. - "இந்தக் கரும்புத் தோட்டங்களைப் படம் பிடிக்க லாம்” என்று நான் சொன்னேன். ஏன் ? என்னிடம் முன்பே சில கரும்புத் தோட்டங்களின் படங்கள் இருக்கின்றன. அவற்றை. உபயோகப் படுத்திக் கொள்ளலாமே !’ என்ருர். எங்கள் போட்டோக் கலைஞர் டு என். ராமகிருஷ்ணன். "அந்தப் படங்கள் எதற்கு ? இந்தப் பக்கத்துக் கரும்புத் தோட்டப் படந்தான் வேண்டும்' என்றேன். பிறகு, படம் எடுத்தால் இந்த ஊர்க் கரும்புத் தோட்டந்தான் இது என்று எப்படித் தெரிந்துகொள்ள முடியும் ? வேண்டாம்' என்று: சொல்லி விட்டேன். கார் ஊரை அணுகிக் கொண்டிருந்தது, ஒரு கரும்புத் தோட்டத்திற்குப் பாயும் மடையின் வழியே அது செல்லும்போது உடம்பு ஒரு குலுங்கு குலுங்கி u lġl• . . அந்தக் காலத்திலும்-அதாவது அப்பர் சுவாமி கள் இந்தத் திருவாமூரில் அவதாரம் செய்த காலத் திலும்-இந்தப் பக்கங்களில் கரும்புத் தோட்டங்கள் மிகுதியாக இருந்தன. இந்தச் செய்தியைச் சேக்கிழார் சொல்கிருர். கவிஞருக்கு எப்போதுமே கற்பனை வளம் மிகுதி. உண்மை ஒரு பங்காணுல் கற்பனை பத்துப் பங்காக வளரும். சேக்கிழார் காட்டும்.