பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 வாருங்கள் பார்க்கலாம் பேசி முடித்து நிச்சயம் செய்து அன்றே திருமணத் தையும் நிறைவேற்றி விடுகிருர்களாம். ஊருக்குப் புறம்பே உள்ள திருக்கோயில் அணுகினுேம். அருகில் குருக்கள் வீடு மாத்திரம் இருக்கிறது. சின்னஞ் சிறிய கோயில். கோயிலின் சந்நிதி தெற்கு நோக்கி இருக்கிறது. ஆயினும் ஊர்க்காரர்கள் போவதற்கு மதிற் சுவரில் மேற்கு நோக்கி ஒரு சிறிய வாசல வைத்திருக்கிருர்கள். அப்பர் சுவாமிகள் எளிமையே உருவமானவர். படாடோபம் சிறிதும் இல்லாதவர். அவர் பிறந்த ஊர்க் கோயிலும் எளிய உருவத்தில் இருக்கிறது. ஊரே பெருவழிக்குப் புறம்பே நாகரிகக் காற்றுப் புகாத சூழலில் அமைந்திருக்கிறது. அந்த ஊருக்குக் கார் போவதே ஆச்சரியம். உழவாரப் பணிசெய்து வாழ்ந்த நாவுக்கரசர் ஊரில் இப்போது ஓர் ஆதாரப் பள்ளி நடந்து வருகிறது; ஊருக்குப் பொருத்த மானது அல்லவா? அதன் தலைமையாசிரியரும் எங்களுடன் கோயில் முதலிய இடங்களுக்கு வந்து, தம் பள்ளிக்கூடத்துக்கும் அழைத்துக் கொண்டு போய்க் காட்டினர். - . கோயிலுக்குத் தெற்கே ஒரு குளம் இருக்கிறது. எங்கும் பரந்த வயற்பரப்புக்கு இடையே இயற்கைத் தேவியின் எழில் குலவும் சூழலிலே குளமும் கோயிலும் அப்பர் சுவாமிகளின் திருக் குறுந்தொகைப் பாசுரம் போலச் சிறிய உருவத்தில் பெரிய அழகு உடையன வாய்த் திகழ்கின்றன. - அக்காலத்தில் இது பெரிய ஊராகத்தான் இருந் திருக்க வேண்டும். ----